Categories: சினிமா

GOAT படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் Vijay..! வைரலாகும் வீடியோ…!

வெளியிட்டது

மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் தான் நடிகர் விஜய். இவரின் படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்து வருகிறது. லியோ படம் வெளியாகி முதல் நாளிலேயே 149 கோடி ரூபாயை வசூல் செய்த நிலையில், தற்போது இவரின் கோட் படமும் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. அண்மையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடித்த கோட் திரைப்படம் வெளியாகி வசூல் மழையை பொழிந்து இருக்கிறது.

GOAT படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் Vijay..! வைரலாகும் வீடியோ...! 1

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி சௌத்ரி நடித்து உள்ளார். மேலும் இவர்களுடன் பிரபுதேவா, பிரசாந்த் , அஜ்மல் என பலரும் நடித்து உள்ளனர். ஏஜிஎஸ் தயாரிப்பில் யுவன் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இப்படம் திரையரங்கில் வெளியாகி மாபெரும் வசூலை பெற்றுக்கொடுத்த நிலையில் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

தற்போது இப்படம் 100கோடி ரூபாய் லாபத்தை தமிழகத்தில் மட்டுமே கொடுத்து இருப்பதை தயாரிப்பாளர் அர்ச்சனா தளபதி விஜய் உடன் இணைந்து கொண்டாடி உள்ளார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

 

வெளியிட்டது

புதிய செய்திகள்