தமிழ் சினிமாவில் உச்ச நடிகர் விஜய். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் இருக்கிறது. இவர் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் இவருடன் சினேகா , மீனாட்சி , பிரபுதேவா , மைக்மோகன் பிரசாந்த் ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தி இருந்தது. தற்போது இப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். கேரளாவில் அதிகாலையிலேயே கோட் படம் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் முதல் காட்சி 9 மணிக்கு அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்திற்காக தளபதி விஜய் போட்ட புதிய கெட்டப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நடிகர் விஜய் ஹாலிவுட் நடிகர்கள் போல இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.