தமிழ் திரையுலகின் முத்த இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மாபெரும் பொருட்செலவில் தயாராகியுள்ள படம் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் கதை படமாக பல நாயகர்களும் இயக்குனர்களும் போராடி உள்ளனர். எம்.ஜி.ஆர் ஆசைப்பட்ட இந்த கல்கியின் தொடர் பின்னர், புராதான கதைகளை கொண்டு படம் எடுத்து வரும் இயக்குனர் மணிரத்தினத்திற்கும் பெரிய ஆவல் இருந்தது.தமிழ் திரையுலகில் இருந்து பாகுபலிக்கு போட்டியாக உருவாகிறது என எதிர்பார்க்கும் பலருக்கும் இந்த படம் எடுக்க கஷ்ட பட்ட வரலாறு தெரியாது.

படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என்வும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தில் நடிக்கும் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா ஆகியோரின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ஏற்கனவே பெரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று வெளியாகிய டீஸர் உண்மையிலேயே அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்துள்ளது. படத்தில் பிரமாண்ட செட்டுகள், காட்சி அமைப்புகள், சிலிர்க்க வைக்கும் இசை என மணிரத்னம் உண்மையிலேயே தமிழர்களுக்கு மிக பெரிய கவுரவத்தை கொடுக்கக்கூடிய ஒரு படத்தை தான் தந்திருக்கிறார். படத்தில் சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பிரபு, பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், திரிஷா என மிக பெரிய நட்சத்திர பட்டலாமே உள்ளது.
இந்த படத்தில் குந்தவையின் கதாபாத்திரத்தில் உண்மையில் நடிக்க இருந்தது நடிகை க்ரீத்தி சுரேஷ் தான். முதலில் அவரிடம் தான் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அவர் அப்போது நடிகர் ரஜினியின் “அண்ணாத்தே” படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் அப்போது கால்ஷீட் ஒதுக்க முடியாமல், படத்தை கைநழுவ விட்டுள்ளார். அண்ணாத்தே எப்படி ஓடியது என்பது சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. நல்ல வாய்ப்பை கைநழுவ விட்டுவிட்டு இப்பொது நடிகைக்கு என செய்வது என்று தெரியாமல இருக்கிறாராம் கீர்த்தி சுரேஷ்.
பொன்னியின் செல்வன் படத்தின் டீஸர் நீங்களும் காண….
Video Courtesy – MadrasTalkies