நடிகை கோபிகா நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. சில ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்து விலகி இருக்கும் அவரின் குடும்பத்தின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது அவரின் மகள் எமி கோபிகாவை போல அப்படியே இருக்கிறார். கேரளாவில் பிறந்து வளர்ந்தவர் நடிகை கோபிகா. இவரின் இயற்பெயர் கேர்ளி ஆண்ட்டோ ஆகும். கோபிகா கேரள மாநிலத்தில் பள்ளி படிப்பை முடித்தார். பின்னர் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் சமூகத்துவியல் படிப்பை முடித்திருக்கிறார். நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக திரைத்துறைக்குள் நுழைந்த இவர், முதன்முறையாக “பிரணயமணிதுவல்” என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானார்.

பின்னர் இவர் 2004 ஆம் ஆண்டு வெளியான ஆட்டோகிராப் என்கிற படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் சேரனுக்கு ஜோடியாக லலிதா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படம் கோபிகாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பின்னர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்த இவர், 2013ஆம் ஆண்டு வரை நடித்தார். பின்னர் திருமணமான காரணத்தினால் நடிப்பிலிருந்து முழுவதுமாக முழுக்கு போட்டுவிட்டு தற்போது தனது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.
தமிழில் கனா கண்டேன், தொட்டி ஜெயா, எம்டன் மகன், வீராப்பு, வெள்ளித்திரை போன்ற படங்களில் நடித்தார். இவருக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு அயர்லாந்து மருத்துவரான அகிலேஷ் சாக்கோ என்பவருடன் கேரளாவில் வைத்து திருமணம் நடந்தது. இவர்களுக்கு எமி மற்றும் எய்தின் என்று இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோபிகாவின் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது அவர் தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் கோபிகாவின் மகள் எமி அப்படியே பார்ப்பதற்கு கோபிகா போலவே இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.