தமிழில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை கனகாவின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆள் அடையாளமே தெரியாமல் கனகா மாறிப் போகிறிருக்கும் புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் போன்ற பல நடிகர்கள் நடித்த பிரபலமானவர் நடிகை தேவிகா.

அவருடைய மகள் கனகாவும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். 1989ம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான ‘கரகாட்டக்காரன்’ படத்தில் கதாநாயகியாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்த அவர் சுமார் 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
குறிப்பாக மலையாளத்தில் இவர் நடித்திருந்த ‘காட்ஃபாதர்’ திரைப்படம் சுமார் 400 நாட்களுக்கும் மேலாக ஓடி வெற்றி பெற்றிருந்தது. கடைசியாக 1999ம் ஆண்டு ‘விரலுக்கேத்த வீக்கம்’ படத்தில் விவேக்கின் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது.
பின்னர் 2000ம் ஆண்டு மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்தார். அதன் பின்னர் எந்த படத்திலும் நடிக்காத அவர் தனது வீட்டிலேயே முடங்கினார். அவரது தாய் தேவிகாவின் மரணம் அவரை பெரிதும் பாதித்திருந்தது. மேலும் தந்தையுடன் ஏற்பட்ட சொத்து தகராறு மற்றும் சில தனிப்பட்ட காரணங்களுக்காக வீட்டில் இருந்து வெளியே வராமல் இருந்தார். அவருடைய வீடும் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து காணப்பட்டது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கனகா இறந்து விட்டதாக தகவல் பரவிய நிலையில் அவரை செய்தி தொலைக்காட்சிகள் பேட்டி எடுப்பதற்காக சென்றனர். அப்போது வீட்டின் ஜன்னல் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டு பூனைகள் மட்டுமே அவருடன் இருந்தது. 20க்கும் மேற்பட்ட பூனைகளுடன் தனியாக வசித்து வந்தார் கனகா.
பின்னர் அவர் சில தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்தார். தன்னால் படங்களில் பழைய மாதிரி நடிக்க முடியவில்லை. எனக்கு யாரும் வாய்ப்பு தரவில்லை என்று கலங்கியிருந்தார். இந்த நிலையில் பல வருடங்களுக்கு பின்னர் நடிகை குட்டி பத்மினி அவரை நேரில் சென்று சந்தித்திருக்கிறார்.
குட்டி பத்மினி நடத்தி வரும் youtube சேனலின் ரசிகர்கள் அவரிடம் கனகாவை சென்று சந்திக்குமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று கனகாவை நேரில் சென்று சந்தித்து அவருடன் உரையாடி இருக்கிறார் குட்டி பத்மினி.
மேலும் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அவர் பகிர்ந்திருக்கிறார். உடல் எடை ஏறி ஆள் அடையாளமே தெரியாமல் கனகா மாறிப் போய் இருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர்.
மேலும் குட்டி பத்மினி கூறும் பொழுது விரைவில் கனகா நமது தொலைக்காட்சிக்கு பேட்டி அளிப்பதாக உறுதி அளித்திருக்கிறார். விரைவில் கனகாவின் பேட்டி நமது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று கூறியிருக்கிறார். எதற்காக இந்த தனிமை? ஏன் இப்படி பாழடைந்த வீட்டில் வசிக்கிறார்? என்பதெல்லாம் குறித்து கனகா விரைவில் மனம் திறந்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.