Categories: சினிமா

செம்ம கியூட்டாக தீபாவளி கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்..!

வெளியிட்டது

முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் ஜொலித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. ரஜினி முருகன் படத்தில் நாயகியாக நடித்து சினிமாவுக்கு அறிமுகமாகி இன்று தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்து உள்ளார். தற்போது பாலிவுட்டில் ஜான் பேபி எனும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இதன் மூலம் பாலிவுட் சினிமாவிலும் களம் இறங்க உள்ளார்.

செம்ம கியூட்டாக தீபாவளி கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்..! 1

தற்போது கதாநாயகியாக நடிப்பதை விட்டுவிட்டு கதையின் நாயகியாக உருவெடுத்து உள்ளார். இவருக்கு அண்மையில் வெளியான ரகு தாத்தா படம் எதிர்பார்த்த வரவேற்பினை கொடுக்கவில்லை. இவருக்கு அடுத்ததாக ரிவால்வர் ரீட்டா படம் வெளியாக உள்ளது. இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனை காண கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கின்றனர்.

தற்போது இவர் தனது குடும்பத்துடன் சேர்ந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி வீடியோ வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் புகைப்படங்களுக்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்