Categories: சினிமா

சேலையில் ஜொலிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்..! வேறெலெவெலில் வைரலாகும் புகைப்படங்கள்..!

வெளியிட்டது

முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் ஜொலித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. ரஜினி முருகன் படத்தில் நாயகியாக நடித்து சினிமாவுக்கு அறிமுகமாகி இன்று தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்து உள்ளார். தற்போது பாலிவுட்டில் ஜான் பேபி எனும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இதன் மூலம் பாலிவுட் சினிமாவிலும் களம் இறங்க உள்ளார்.

சேலையில் ஜொலிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்..! வேறெலெவெலில் வைரலாகும் புகைப்படங்கள்..! 1

தற்போது கதாநாயகியாக நடிப்பதை விட்டுவிட்டு கதையின் நாயகியாக உருவெடுத்து உள்ளார். இவருக்கு அண்மையில் வெளியான ரகு தாத்தா படம் எதிர்பார்த்த வரவேற்பினை கொடுக்கவில்லை. இவருக்கு அடுத்ததாக ரிவால்வர் ரீட்டா படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது. இதனை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கின்றனர்.

தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ், சேலையில் கலக்கலான புகைப்படங்களை எடுத்து உள்ளார். இந்த புகைப்படங்களை ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி கிளாமருக்கு தாவியதால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இது ரசிகர்களை கடும் அதிருப்தி ஆக்கி இருக்கிறது. தற்போது கீர்த்தி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெளியிட்டது

புதிய செய்திகள்