முன்னணி நடிகையாக தெலுங்கு சினிமாவில் வலம் வருபவர் க்ரித்தி ஷெட்டி. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் உள்ளது. தெலுங்கில் இவர் நடித்த வாரியர் மற்றும் கஸ்டடி படங்கள் தமிழில் வெளியாகி இருந்தது. தமிழில் இதுவரை இவர் நேரிடையாக நடிக்காவிட்டாலும் , ரசிகர்கள் அதிகம் உள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக வணங்கான் படத்தில் நடித்து வந்த இவர் அப்படத்தில் இருந்து விலகி உள்ளார்.

தற்போது இவர் நேரிடையாக தமிழ் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். இவர் நடிப்பில் வா வாத்தியாரே, எல்ஐசி மற்றும் ஜீனி போன்ற படங்கள் வெளியாக இருக்கிறது. இதன் மூலம் தமிழிலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தினை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. தற்போது இவர் கருப்பு உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. இந்த புகைப்படங்களை இவரது ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.