Categories: சினிமா

முட்டாள்கள் முட்டாள்களாகத்தான் இருப்பார்கள்..! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை மீனா..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் கொடிகட்டி பறந்த நடிகை மீனா. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் தற்போது வரை இருக்கிறது. தமிழ் சினிமாவில் கண்ணழகி என்று கூறினால் அது இன்றுவரை மீனா தான். அப்படி தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இன்று முன்னணி நடிகையாக உயர்ந்து உள்ளார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாள சினிமா வரை பல முன்னணி நடிகர்களுடனும் இவர் கதாநாயகியாக நடித்து விட்டார்.

முட்டாள்கள் முட்டாள்களாகத்தான் இருப்பார்கள்..! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை மீனா..! 1

தற்போது இவரது மகளையும் தன்னை போல குழந்தை நட்சத்திரமாக தெறி படத்தில் அறிமுகப்படுத்தி இருந்தார். இந்நிலையில் நடிகை மீனாவின் கணவர் எதிர்பாராத விதமாக கொரோனா தாக்குதலால் உயிரிழந்தார். இது மீனாவின் வாழ்க்கையை முற்றிலுமாக திருப்பி போட்டது. அதிலிருந்து மீண்டு வந்த மீனா தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து கவனம் செலுத்தி வருகிறார். அடிக்கடி மீனா குறித்த வதந்திகள் இணையத்தில் வெளியாகி வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் தற்போது நடிகை மீனாவையும், அரசியல்வாதி ஒருவரையும் தொடர்பு படுத்தி இணையத்தில் செய்திகள் உலா வருகிறது. அதற்கு மறைமுகமாக மீனா தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்து இருக்கிறார். அந்த பதிவில், நான் ஒரு நிலையான உள்போராட்டத்தை அனுபவித்து வருகிறேன்.மிகவும் வலியை உணர்கிறேன், நீங்கள் பார்க்கும்பொழுது நன்றாக இருப்பது போல தோன்றும் ஆனால் எனது வலி எனக்கு மட்டும் தான் தெரியும் என கூறி உள்ளார். மேலும் வெறுப்பவர்கள் வேறுபவர்களாகவும், முட்டாள்கள் முட்டாள்களாகத்தான் இருப்பார்கள் என கூறி உள்ளார்.

 

வெளியிட்டது

புதிய செய்திகள்