Categories: சினிமா

பா.ஜனதா கட்சியில் சேர நடிகை நயன்தாராவுக்கு அழைப்பு வந்ததா?

வெளியிட்டது
பா.ஜனதா கட்சியில் சேர நடிகை நயன்தாராவுக்கு அழைப்பு வந்ததா? 1

நயன்தாரா சில வருடங்களுக்கு முன்பாக கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார்.அதை தொடர்ந்து இந்து கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருகிறார். அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு தரையில் உட்கார்ந்து பக்தர்களோடு உணவு உண்டு புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியிட்டார்.

இரு தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு தன் காதலனுடன் சென்று சாமி கும்பிட்டார். பின்னர் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றும் வழிபட்டு இருந்தார். முருகன் கோவிலில் நயன்தாராவுடன் சேர்ந்து பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மனும் சாமி கும்பிட்டார்.

அப்போது நயன்தாராவை பா.ஜனதா கட்சியில் சேரும்படி அவர் அழைப்பு விடுத்தார். பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். நீங்கள் பா.ஜனதாவில் சேர்ந்தால் அந்த திட்டங்களை மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய முடியும். டெல்லியில் பிரதமரை சந்தித்து பா.ஜனதா கட்சியில் சேர்ந்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்.

அவர் பேசியதை நயன்தாரா சிரித்தபடியே கேட்டுக்கொண்டு நின்றிருந்தார். பதில் எதுவும் சொல்லவில்லை. நயன்தாரா ஏற்கனவே தமிழ், தெலுங்கில் தயாரான ஸ்ரீராமராஜ்ஜியம் பக்தி படத்தில் சீதையாக நடித்து இருந்தார்.தற்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் மகிமைகளை சொல்லும் மூக்குத்தி அம்மன் என்ற பக்தி படத்திலும் விரதம் இருந்து நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்