Categories: சினிமா

நடிகை நயன்தாராவின் திருமண வீடியோ ட்ரைலரை வெளியிட்டது நெட்பிளிக்ஸ்..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருப்பவர் நயன்தாரா. சரத்குமாரின் ஐயா படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகமாகி இன்று தனக்கான மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தையே சேர்த்து உள்ளார்.தற்போது கதாநாயகியாக நடிப்பதை விட்டுவிட்டு கதையின் நாயகியாக நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. மேலும் அவர் நடிக்கும் படங்கள் அவருக்கு தொடர்ந்து வெற்றியை பெற்றுக்கொடுத்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகை நயன்தாராவின் திருமண வீடியோ ட்ரைலரை வெளியிட்டது நெட்பிளிக்ஸ்..! 1

இவருக்கு அடுத்ததாக டெஸ்ட் படம் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிக்க உள்ளார்.அண்மையில் ஜவான் படத்தில் நடித்து ஹிந்தியிலும் என்ட்ரி கொடுத்து இருக்கிறார் நயன்தாரா.தொடர்ந்து படங்களில் ஓய்வு இல்லாமல் நடித்து வரும் நயன்தாரா தனது கணவர் விக்கி மற்றும் குழந்தைகளுடனும் அடிக்கடி நேரத்தை செலவிட்டு வருகிறார்.

நடிகை நயன்தாரா தனது திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு விற்பனை செய்து இருந்தார். திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலான நிலையில், நயன்தாராவின் திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் வெளியிட உள்ளது. அதன் முன்னோட்டமாக தற்போது ட்ரைலரை வெளியிட்டுள்ளது. ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

Embed Video Credits : NETFLIX INDIA

வெளியிட்டது

புதிய செய்திகள்