Categories: சினிமா

பையன் பொறந்து இருக்கான்.! திருமணமாகி ஆறே மாதத்தில் ஆண் குழந்தைக்கு தாயான நடிகை பூர்ணா.!

வெளியிட்டது

நடிகை பூர்ணாவிற்கு தற்போது ஆண் குழந்தை பிறந்து இருக்கும் செய்தியை அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். குழந்தை பிறந்த புகைப்படங்களையும், கணவர் தன் குழந்தைக்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பையன் பொறந்து இருக்கான்.! திருமணமாகி ஆறே மாதத்தில் ஆண் குழந்தைக்கு தாயான நடிகை பூர்ணா.! 1

தமிழ் திரை உலகில் இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்கிற படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் பூர்ணா. கேரளாவில் பிறந்து வளர்ந்த இவரின் இயற்பெயர் சம்னா காசிம். திரைப்படங்களுக்காக தனது பெயரை பூர்ணா என்று மாற்றிக் கொண்டார்.

தமிழில் இவர் கொடைக்கானல், ஆடு புலி, வித்தகன், வேலூர் மாவட்டம், ஜன்னல் ஓரம், தகராறு, சகலகலா வல்லவன், கொடிவீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோபிக்கான தலைவி படத்தில் அவரது தோழியாக வி கே சசிகலா கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். மேலும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் நடித்திருக்கிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார் பூர்ணா. குறிப்பாக தமிழ் படங்களை விட அவர் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தெலுங்கு படங்களில் பல படங்களில் பேயாக நடித்து வருவதால் அவரை தெலுங்கு படங்களில் பேய்களின் ராணி என்று பத்திரிகைகள் விமர்சனம் செய்தது.

 

தற்போது சுமார் ஆறு படங்களில் கமிட்டாகி இருக்கிறார். தமிழில் மட்டும் பிசாசு 2, அம்மாயி, பேசும் படம் போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டிருந்தார். சாணித் ஆசிப் அலி என்கிற தொழிலதிபருடன் அவருக்கு திருமணம் நடந்திருந்தது.

திருமணமாகி மூன்றே மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் வளைகாப்பு நடத்தியும் அந்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார் பூர்ணா. கடந்த அக்டோபர் மாதம் திருமணம் முடிந்த நிலையில் ஆறே மாதத்தில் அவருக்கு குழந்தை பிறந்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தனக்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்து உள்ளார் பூர்ணா. பலரும் பூர்ணாவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்