Categories: சினிமா

கர்ப்பமாக இருக்கும் கபாலி பட நடிகை ராதிகா ஆப்தே..! வைரலாகும் புகைப்படங்கள்..!

வெளியிட்டது

2005ஆம் ஆண்டு ஹிந்தி படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகை ராதிகா ஆப்தே. இப்படத்தை தொடர்ந்து பெங்காலி, மராத்தி, என வரிசையாக படங்கள் நடிக்க தொடங்கினார். இவர் தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் நடித்து என்ட்ரி கொடுத்து இருந்தார். இப்படம் இவருக்கு சரியான வரவேற்பினை பெற்று கொடுக்கவில்லை. இப்படத்திற்கு பிறகு தமிழ் படங்களில் கவனம் செலுத்தாத நிலையில், கபாலி படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

கர்ப்பமாக இருக்கும் கபாலி பட நடிகை ராதிகா ஆப்தே..! வைரலாகும் புகைப்படங்கள்..! 1

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. மேலும் ராதிகா ஆப்தேயும் இப்படத்தின் மூலம் நன்கு அறியப்பட்டவர் ஆகினார். இப்படத்திற்கு பிறகு பாலிவுட் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்தார். பின்னர் பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்று இருந்தார் ராதிகா. மேலும் Benedict Taylor என்பவரை கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தே, தற்போது கர்ப்பமாக உள்ளார். அவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

வெளியிட்டது

புதிய செய்திகள்