பயங்கர விபத்துக்குள்ளான ரம்பாவின் கார்.! கனடாவில் குழந்தைகளுடன் சென்ற போது பெரும் விபத்து.!

வெளியிட்டது

நடிகை ரம்பாவின் கார் தற்போது விபத்துக்குள்ளாகி இருக்கிறது. அதில் ரம்பாவும் அவரது மூத்த மகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கின்றனர். அவரது இரண்டாவது மகள் சாஷா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ரம்பா. ஆந்திரா விஜயவாடாவில் பிறந்து வளர்ந்த இவர் 1996ம் ஆண்டு உள்ளத்தை அள்ளித்தா என்கிற படம் மூலமாக தமிழில் அறிமுகமானார். 90களின் கனவு கன்னியாக வலம் வந்தார். தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருந்தார் ரம்பா. குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி, கமல் என அனைவருடன் நடிக்க தொடங்கினார்.

பயங்கர விபத்துக்குள்ளான ரம்பாவின் கார்.! கனடாவில் குழந்தைகளுடன் சென்ற போது பெரும் விபத்து.! 1

ரஜினியுடன் அருணாச்சலம், கமலுடன் காதலா காதலா, விஜய் உடன் நினைத்தேன் வந்தாய். போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கத் தொடங்கினார். தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் நடிக்க தொடங்கினார். இந்த நிலையில் கனடா நாட்டின் தொழிலதிபராக இருக்கும் இந்திரன் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவர் பெரிய அளவில் நடிப்பில் ஆர்வம் காட்டவில்லை. அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கனடா நாட்டில் வசித்து வருகிறார் ரம்பா. அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை மட்டுமே பதிவு செய்வார். இந்த நிலையில் ரம்பா மற்றும் குழந்தைகளுக்கு பெரிய கார் விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது.

குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று விட்டு வீடு திரும்பும் பொழுது மற்றொரு கார் மீது தன் கார் மோதியதாகவும், இந்த விபத்தில் தானும் தனது குழந்தைகளும் சிறிய காயத்துடன் உயிர்தப்பியதாகவும், தன்னுடைய இரண்டாவது குழந்தை ஷாஷா மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார் ரம்பா. மேலும் இது கெட்ட நாள் கெட்ட நேரம் எங்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் உங்கள் பிரார்த்தனை மிகுந்த அர்த்தம் நிறைந்தது என்று தனது instagram பக்கத்தில் மகள் சிகிச்சை பெறும் புகைப்படங்களையும் கார் விபத்துக்குள்ளான புகைப்படங்களையும் பகிர்ந்து உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார் நடிகை ரம்பா.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்