Categories: சினிமா

நடிகை ராஷ்மிகா மேல் புகார்! நேரில் ஆஜராக உத்தரவு!!

வெளியிட்டது
நடிகை ராஷ்மிகா மேல் புகார்! நேரில் ஆஜராக உத்தரவு!! 1

ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய திரையுலகில் சமீப காலமாக வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக இருக்கும் பட்சத்தில் இவர் மீது வரி ஏய்ப்பு புகார் வந்ததை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு என்ற மாவட்டத்தில் குக்குலூரு கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர். இந்த சோதனை நேற்று முன்தினம் நடந்தது. சோதனையின்போது நடிகை ராஷ்மிகா வீட்டில் இல்லை. படப்பிடிப்பிற்காக சென்னை சென்று இருந்தார்.

இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. பின்னர் அதிகாரிகள் ராஷ்மிகாவின் குடும்பத்தினரிடம் விடிய, விடிய விசாரணை நடத்தினர்.மேலும் நடிகை ராஷ்மிகாவுக்கு சொந்தமான ஒரு திருமண மண்டபத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இது தவிர நடிகை ராஷ்மிகாவுக்கு சொந்தமாக விளம்பர நிறுவனம் ஒன்றும், பல்வேறு தொழில் நிறுவனங்களில் பங்குகளும் உள்ளதாக தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி ராஷ்மிகாவின் தந்தையான மதன் மஞ்சண்ணா, தாய் சுமன் இவர்கள் இருவரின் பெயர்களில் கடந்த ஒரு வருடத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பதிவாகி இருந்தது என்று கூறப்படுகிறது. சொத்து ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக விசாரணை செய்ய பெங்களூருவில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு ராஷ்மிகாவும், அவருடைய பெற்றோரும் விரைவில் வந்து ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்