தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டங்களை கலக்கியவர் நடிகை ரோஜா. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே அப்போது இருந்தது. பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து உள்ளார் ரோஜா. நடிகர் ரஜினிகாந்திற்கு இவர் ஜோடியாக நடித்த வீரா,உழைப்பாளி போன்ற படங்கள் மிகப்பெரிய ஹிட் படங்கள். அசைக்க முடியாத அளவு நடிகை ரோஜா முன்னணி நடிகையாக ஜொலித்து வந்தார்.

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் படங்கள் நடித்து அசத்தியுள்ளார். ஆரம்பத்தில் சினிமாவை விட்டு விலகிய நடிகை ரோஜா தற்போது ஆந்திர அரசியலில் கலக்கி வருகிறார். எம்எல்ஏ வாக வெற்றிபெற்று சுற்றுலாத்துறை அமைச்சராக பணியாற்றி வந்தார். பின்னர் கடந்த தேர்தலில் இவரது கட்சி தோல்வியை சந்தித்து உள்ளது. இவர் சிங்கபெண்ணாக சினிமா மற்றும் அரசியலில் வலம் வந்துகொண்டு இருக்கிறார்
தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்து உள்ளார். அதன்படி தற்போது இவர் தோழிகளுடன் திருப்பரங்குன்றம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து உள்ளார். இந்த புகைப்படங்களை நடிகை ரோஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.