Categories: சினிமா

ரோஜாவின் 51வது பிறந்தநாள்.! கேக் வெட்டி பார்ட்டி வைத்து கொண்டாடிய மகன் மற்றும் கணவர்.!

வெளியிட்டது

தமிழின் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ரோஜா இன்று தனது 51வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அவருடைய மகன் ரோஜாவிற்கு கேக் வெட்டி மிகப்பிரமாண்டமாக விழாவை சிறப்பித்துள்ளார். அந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

ரோஜாவின் 51வது பிறந்தநாள்.! கேக் வெட்டி பார்ட்டி வைத்து கொண்டாடிய மகன் மற்றும் கணவர்.! 1
முதலில் தெலுங்கு திரையுலகில் அறிமுகமான ரோஜாவுக்கு முதல் படம் தோல்வியை கொடுத்தது. பின்னர் இயக்குனர் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் வெளியான ‘செம்பருத்தி’ என்கிற படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.


இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே இயக்குனர் செல்வமணிக்கும் ரோஜாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும் மகனும் இருக்கிறார்கள்.


தமிழில் முதல் படத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என அனைத்து முன்னணி நடிகர் உடன் நடித்து ஒரு கலக்கு கலக்கினார் ரோஜா.


மேலும் பல படங்களில் அம்மன் வேடங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார். படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தபோதே ரோஜாவிற்கு அரசியல் ஆசை வந்தது.

முதலில் சந்திரபாபு நாயுடுவின் கட்சியில் இணைந்து பணியாற்றினார். பின்னர் சந்திரபாபுவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கிருந்து விலகி ஜெகன்மோகன் கட்சியில் இணைந்து இரண்டு முறை எம்எல்ஏ ஆனார். தற்போது சுற்றுலாத்துறை அமைச்சராகவும் இருக்கிறார்.


சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் அவர் புகைப்படங்களை பகிர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். வீட்டில் ஏதாவது பூஜை நடந்தால் தனது திரைப்படத் தோழிகளை அழைத்து பூஜை நடத்துவது, பிறந்தநாள் கொண்டாடுவது என்று மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.


இந்த நிலையில் ரோஜாவுக்கு நேற்று 51வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது. அதற்காக அவரது மகன், கணவர், மகள் என அனைவரும் இணைந்து பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்து, அவருக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியிருக்கின்றனர்.


அவரின் பிறந்த நாளுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ரோஜாவிற்கு 51 வயது ஆகிவிட்டதா? நம்பவே முடியவில்லையே, என்று சொல்லி கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்