Categories: சினிமா

கோலாகலமாக நடைபெற்ற நடிகை Saipallavi தங்கை திருமணம்..! வைரலாகும் திருமண புகைப்படங்கள்…!

வெளியிட்டது

ப்ரேமம் படத்தில் நடித்து மலர் டீச்சராக இளைஞர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் சாய் பல்லவி. இப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை மலையாள சினிமாவில் மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் பெற்றுக்கொடுத்தது. தற்போது இவர் தெலுங்கிலும் தொடர்ந்து படங்கள் நடித்து அசத்தி வருகிறார். முன்னணி நடிகையாக உருவெடுத்து இருக்கும் சாய் பல்லவி அடுத்தடுத்து தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக உள்ளார்.

கோலாகலமாக நடைபெற்ற நடிகை Saipallavi தங்கை திருமணம்..! வைரலாகும் திருமண புகைப்படங்கள்...! 1

தற்போது இவரது தங்கை பூஜா கண்ணன் திருமண நிச்சயம் அண்மையில் நடைபெற்று இருந்தது. காதலித்து வந்தவரை வீட்டின் சம்மதத்துடன் பூஜா திருமணம் செய்து உள்ளார். படுகர் இன முறைப்படி ஆட்டம் பாடத்துடன் சாய் பல்லவி தங்கை பூஜா திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்த ரசிகர்கள் சாய் பல்லவி தங்கைக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோக்கள் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வருகிறது.

வெளியிட்டது

புதிய செய்திகள்