ராஜா ராணி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகை சாக்ஷி அகர்வால். இப்படத்திற்கு பிறகு சினிமாவில் தொடர்ந்து சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் இவர். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மக்களால் அறியப்பட்டவர் ஆகினார். ஆனால் இவருக்கு எதிர்பார்த்த சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, சிண்ட்ரெல்லா,அரண்மனை 3 மற்றும் பஹீரா என குறிப்பிட்ட படங்களில் மட்டுமே முக்கிய கதாபாத்திரத்தில் வாய்ப்பு கிடைத்தது. தற்போது பட வாய்ப்புகள் இல்லாத இவர் செம்ம கிளாமராக புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் அசத்தி வருகிறார். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடருகின்றனர்.
இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வால் தனது ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் எச்சரித்து உள்ளார். அதில் தனது பெயரில் மோசடி நடப்பதாகவும், ஒரு செல்போன் நம்பரை பதிவிட்டு அதிலிருந்து அனைவரையும் தொடர்பு கொண்டு தனது பெயரை கூறி பணம் வாங்கி வருவதாகவும் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும்படி சாக்ஷி அகர்வால் தெரிவித்துள்ளார்.