தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. பானா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆகிய இவர் இன்று பல இளைஞர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து இருக்கிறார். தமிழில் மட்டுமில்லாமல் சமந்தா தற்போது தெலுங்கு சினிமாவிலும் கொடிகட்டி பறந்து வருகிறார். தமிழ் தெலுங்கு என மாறி மாறி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்த இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. அந்தளவுக்கு தனது ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் சமந்தா. தமிழ் தெலுங்கு மட்டுமில்லாமல் தற்போது ஹிந்தியிலும் கால்தடம் பதித்து இருக்கிறார். சென்னையை சேர்ந்த நடிகை சமந்தா தற்போது பாலிவுட் வரை ஜொலித்து வருவது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது.
இந்நிலையில் இவர் தனது தோழியின் திருமணத்தில் கலந்துகொண்டு உள்ளார். இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை சமந்தா. இந்த புகைப்படங்கள் சமந்தாவின் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. சமந்தாவின் புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர்.