Categories: சினிமா

நடிகை சமந்தாவின் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..!

வெளியிட்டது

முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் சமந்தா.அதர்வா முரளிக்கு ஜோடியாக பானா காத்தாடி படத்தில் நடித்து கதாநாயகியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார். தனது கடின உழைப்பால் திரைத்துறையில் இன்று உச்சத்தில் இருக்கும் இவர் இன்று பல இளைஞர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து இருக்கிறார். தமிழில் மட்டுமில்லாமல் சமந்தா தற்போது தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாவிலும் கொடிகட்டி பறந்து வருகிறார். தமிழ் தெலுங்கு என மாறி மாறி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

நடிகை சமந்தாவின் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..! 1

முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து உச்ச நடிகையாக வலம் வரும் இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவருடன் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக அவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். மேலும் தொடர்ந்து படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் நடிகை சமந்தா. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே ஆதரவாக சினிமாவில் உள்ளது.

அண்மையில் மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு வந்த இவர்,தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இணையத்தில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

வெளியிட்டது

புதிய செய்திகள்