Categories: சினிமா

அண்ணன் தங்கை உடன் நடிகை ஷாலினி..! வெளியான அழகிய குடும்ப புகைப்படங்கள்..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ஷாலினி. தனது எதார்த்த நடிப்பால் பலரையும் கவர்ந்து தனக்கென பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்து உள்ளார். குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகம் ஆகிய இவர், தமிழ் சினிமாவிலும் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரையும் கவர்ந்து இருக்கிறார்.

அண்ணன் தங்கை உடன் நடிகை ஷாலினி..! வெளியான அழகிய குடும்ப புகைப்படங்கள்..! 1

தமிழ் சினிமாவில் இவர் கதாநாயகியாக நடித்த முதல் படம் காதலுக்கு மரியாதை. இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்திற்கு பிறகு நடிகை ஷாலினி முன்னணி நடிகையாக சினிமாவில் உருவெடுத்தார். இப்படத்தை தொடர்ந்து அமர்க்களம் படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்து கலக்கி இருந்தார். தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் கதாநாயகியாக நடித்து அடுத்தடுத்து வெற்றிகளை கொடுத்தார்.

மாதவனுக்கு ஜோடியாக இவர் நடித்த அலைபாயுதே படம் இன்றுவரை பலருக்கும் விருப்பமான படங்களில் ஒன்றாக உள்ளது. இவர் நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர் தற்போது தனது தங்கை ஷாம்லி மற்றும் அண்ணன் உடன் புகைப்படம் எடுத்து உள்ளார். இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் ஷாலினி.

வெளியிட்டது

புதிய செய்திகள்