தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வந்தவர் சிம்ரன். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். இந்நிலையில் நடிகை சிம்ரன், விஜயை நேரில் சந்தித்து, தான் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்குமாறு கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்ததாகவும் செய்திகள் வேகமாக இணையத்தில் பரவி வந்தது. தற்போது இந்த செய்தியை அறிந்த நடிகை சிம்ரன் கடுப்பாகி பதில் கொடுத்து உள்ளார்.

அந்த பதிவில், நான் எந்த நடிகருடனும் இணைந்து நடிக்க காத்திருக்கவில்லை, இதுபோன்ற வதந்திகளை கண்டுகொள்ளாமல் இதுவரை இருந்தேன். ஆனால் தற்போது இதுபோன்ற வதந்திகளை பொறுத்துக்கொள்ளமாட்டேன் என கூறியுள்ளார். என்னுடைய குறிக்கோள் வேறு, ஒரு பெண்ணாக என்னுடைய எல்லைகள் என்பது எனக்கு தெரியும், எனது பெயரை மற்றவர்களுடன் இணைத்து வதந்திகள் வருவதை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன்.
இந்த செய்தி உண்மையா என்றுகூட என்னிடம் யாரும் கேட்கவில்லை, இந்த செய்தியை பரப்பியவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகை சிம்ரன் அதிரடியாக பதிவிட்டு உள்ளார்.