Categories: சினிமா

தனது மகளின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய ஸ்ரீதேவி விஜயகுமார்.! வெளியான அழகிய புகைப்படங்கள்.!

வெளியிட்டது

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் தற்போது தனது மகளின் பிறந்தநாளை கொண்டாடி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அவரின் மகளுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தமிழ் திரையுலகில் பழம் பெரும் நடிகர்களாக வலம் வந்தவர்கள் தான் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதிகள். இந்த தம்பதிகளுக்கு வனிதா, ஸ்ரீதேவி, பிரீத்தா விஜயகுமார் என்கிற மூன்று மகள்கள் இருக்கிறார்கள்.

தனது மகளின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய ஸ்ரீதேவி விஜயகுமார்.! வெளியான அழகிய புகைப்படங்கள்.! 1
இவர்கள் மூவருமே பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். வனிதா சந்திரலேகா என்கிற திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார். சில படங்களில் மட்டுமே நடித்த அவர் பின்னர் படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வந்தார். பதிருமணத்திற்கு பின்னர் முற்றிலுமாக திரைத்துறையில் இருந்து விலகி அவர் தற்போது சின்னத்திரை தொலைக்காட்சிகளில் தலைகாட்டி வருகிறார்.


குடும்பத்துடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அவர் தனது சகோதரிகள், தந்தை, அண்ணன் என யாரிடமும் பேசுவதில்லை. இரண்டாவது மகள் பிரீத்தா விஜயகுமார் இயக்குனர் ஹரியை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். மூன்றாவது மகள் ஸ்ரீதேவி விஜயகுமாரும் பல படங்களில் நடித்திருக்கிறார் 1992 ஆம் ஆண்டு வெளியான ரிக்ஷா மாமா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஸ்ரீதேவி.

அதன் பின்னர் சில படங்களில் சப்போர்ட்டிங் ஆக்டர்ஸாக நடித்து வந்த அவர், 2003 ஆம் ஆண்டு வெளியான பிரியமான தோழி என்கிற படத்தின் மூலமாக பலரையும் திரும்பி பார்க்க வைத்தார். அதன் பின்னர் இவர் நடித்த தித்திக்குதே, தேவதையை கண்டேன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்த அவர் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் திரைத்துறையில் இருந்து முழுவதுமாக விலகினார்.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீதேவி தனது தோழிகளான சினேகா, மீனா, சங்கவி ஆகியோருடன் வெளியில் செல்வது, அவுட்டிங் செல்வது என்று புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். மேலும் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படங்களையும், குடும்ப புகைப்படங்களையும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் தனது மகளின் பிறந்தநாளை கொண்டாடி அந்த புகைப்படங்களை instagram பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். 2009 ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவிக்கு 2016 ஆம் ஆண்டு ரூபிகா என்ற மகள் பிறந்திருந்தார். அவரின் ஏழாவது பிறந்த நாளை தற்போது ஸ்ரீதேவி கொண்டாடி இருக்கிறார். தனது கணவர், மகள், குழந்தைகள் என அனைவருடனும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்