நடிகர் சரத்குமாரின் மூத்த மகள் வரலக்ஷ்மி சரத்குமார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்து உள்ளார்.. இப்படத்தை தொடர்ந்து பாலா இயக்கத்தில் இவர் நடித்த தாரை தப்பட்டை படம் நல்ல வரவேற்பினை பெற்றது. பலராலும் நடிகை வரலக்ஷ்மி நடிப்பு பாராட்டி பேசப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு வரலக்ஷ்மி முன்னணி நடிகையாக உருவெடுத்து உள்ளார்.

தற்போது தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவையும் கலக்கி வருகிறார் வரலக்ஷ்மி. தமிழில் நாயகி மற்றும் வில்லி என நடித்து அசத்தி உள்ளார். இவர் வில்லியாக நடித்த சர்க்கார் மற்றும் சண்டக்கோழி 2 போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. தற்போது இவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிகோலாய் என்பவரை திருமணம் செய்து உள்ளார்.
அண்மையில் இவர்களின் திருமணம் தீவு ஒன்றில் கோலாகலமாக நடைபெற்றது. பல நடிகர்ளும் இவர்களின் திருமண வரவேற்பில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தனர். தற்போது கணவர் உடன் தனித்தீவில் தேனிலவை கொண்டாட சென்று உள்ளார் வரலக்ஷ்மி சரத்குமார். இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.