தமிழ் சினிமாவிற்குள் நடனமாடுபவராக அறிமுகம் ஆகியவர் தான் வித்யா பிரதீப். இதனை தொடர்ந்து படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார்.வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் நடிக்க தொடங்கினார். அப்படி இவர் நடித்த சீரியல் தான் நாயகி. இந்த சீரியலில் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்களால் கொடுக்கப்பட்டது. ரசிகர்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்து இருந்த வித்யா திடீரென சீரியலை விட்டு விலகி அதிர்ச்சியை கொடுத்தார்.

பின்னர் தொடர்ந்து கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த தடம் படம் ரசிகர்களுக்கு விருப்பமான படமாக அமைந்துள்ளது. மேலும் இவர் அண்மையில் கண்ணகி படத்தில் நடித்து இருந்தார். திருமணத்திற்கு பிறகு வெளிநாடுகளில் செட்டில் ஆகிய இவர் தற்போது சினிமாவை விட்டு முழுவதுமாக விலகி இருக்கிறார். இந்நிலையில் இவர் தற்போது அம்மாவாக போவதாக ரசிகர்களுக்கு அறிவித்து உள்ளார்.
கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது