விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஹலோ தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் அறிமுகமானவர் விஜயலட்சுமி. இவர் இயக்குனர் அகத்தியனின் இரண்டாவது மகளாவார் மற்றும் குக் வித் கோமாளி சீசன் 2ல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கனியின் உடன் பிறந்த சகோதரி ஆவார். வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007ம் ஆண்டில் வெளிவந்த சென்னை 600028 என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதுதான் இவரின் முதல்படம், முதல் படத்திலேயே நடிப்பில் அசத்தியதால் தொடர்ந்து அஞ்சாதே, சரோஜா போன்ற படங்களில் நடித்தார். அதன் பின்னர் பெரிய அளவில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை.

வெள்ளித் திரையில் வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால், சின்னத்திரை பக்கம் தலைக்காட்டத் தொடங்கினார் விஜயலெட்சுமி. சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி என்ற சீரியலில் நடித்தார். பின்னர் பிக்பாஸில் வாய்ப்பு கிடைத்த காரணத்தால் சன் டிவியை விட்டு வெளியேறி பிக்பாஸில் கலந்து கொண்டார். பிக்பாஸ் சீசன் 2ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார்.அடிதடி சண்டை என விறுவிறுப்பை கூட்டி விளையாடி வந்தார். மக்களின் செல்வாக்கும் இவருக்கு இருந்தது. ஆனாலும் ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அண்மையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் என்ற நிகழ்ச்சியிலும் விளையாடி டைட்டிலும், ஒரு கோடி பணமும் வென்றார் விஜி.
சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் விஜயலெட்சுமி அவ்வபோது வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். இவருக்கு பெரோஸ் என்பவருடன் திருமணமாகி நிலன் என்ற மகனும் உள்ளார். சமீபத்தில் குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்ற விஜயலெட்சுமி அங்கு தனது கணவருடன் மது அருந்தும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் விஜயலெட்சுமியை திட்டி தீர்த்து விட்டனர். மது அருந்தினால் அதை புகைப்படமாக எடுத்து எதற்கு சமூக வலைத்தளங்களில் போட்டு வீண் விளம்பரம் நெகட்டிவ் பப்ளிசிட்டி தேடிக் கொள்கிறீர்கள் என்று கமெண்ட்டில் கழுவி ஊற்றி வருகின்றனர்.