தமிழ்த் திரையுலகில் வாரிசு நடிகர்களின் படையெடுப்பு தற்போது சமீப காலமாக அதிகமாகி வருகிறது. அந்த வகையில் வாரிசு நடிகையாக களமிறங்கி இருக்கிறார் இயக்குனர் சங்கரின் மகள் நடிகை அதிதி. இவர் இயக்குனர் சங்கரின் இளைய மகளாவார். மருத்துவம் படித்த இவர், சினிமாத்துறையில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் இந்த துறைக்குள் நுழைந்தார். 5 வயதிலிருந்தே தான் கர்நாடக சங்கீதத்தையும், நடனம், வெஸ்டர்ன் மற்றும் ஹிந்துஸ்தானி இசைகள் போன்றவற்றை கற்று வருவதாக அவர் கூறியிருந்தார். மேலும் பலரும் சங்கரின் மகள் என்பதாலேயே அவருக்கு வாய்ப்பு கிடைத்ததாக கூறி வந்த நிலையில் தான் தனது திறமையை பயன்படுத்தியே இந்த திரைத்துறைக்கு வந்துள்ளேன் என்று அவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுத்திருந்தார் நடிகை அதிதி. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

இந்த நிலையில் அவரின் முதல் படமான விருமன் என்ற திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. தனது முதல் படத்திலேயே மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் அதிதி என்று தான் கூற வேண்டும். படம் கலவையான விமர்சனங்கள் பெற்ற போதிலும், அதிதியின் நடிப்பையும் அவரின் நடனத்தையும் பலரும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இவர் முறையாக சங்கீதம் மற்றும் நடனத்தை பயின்றதால் படத்தில் சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த படத்தில் மதுரவீரன் என்ற பாடலை யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பாடியிருக்கிறார். பல விமர்சனங்களுக்கு மத்தியிலும் இவர் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். சிவகார்த்திகேயனின் 22 வது படமான மாவீரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் அதிதி.
விருமன் படம் வெளியாவதற்கு முன்பே அவர் பல படங்களில் நடிக்க கமிட் ஆவது பல சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த போதிலும், அதையெல்லாம் அவர் கண்டுகொள்ளாமல் முன்னேறிக்கொண்டே தான் இருக்கிறார். தற்போது அதிதி ஷங்கர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து மேடையில் மரண குத்தாட்டம் போட்டுள்ளார். யுவனும் அதிதிக்கு ஈடு கொடுத்து செம்ம குத்தாட்டம் போட்டார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை அதிதியின் ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..Watch the below video..