Categories: சினிமா

ஷங்கர் மகள்ன்னு யாரும் தூக்கி கொடுக்கல..மோசமாக விமர்சித்தவர்களை விட்டு விளாசிய அதிதி | Aditi Shankar

வெளியிட்டது

இயக்குனர் சங்கரின் மகள் என்பதாலேயே எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துவிடவில்லை என்றும், தன்னுடைய உழைப்பால் தான் வந்திருப்பதாகவும் தன் மேல் உள்ள விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகை அதிதி. தமிழின் மிகப் பிரமாண்ட இயக்குனராக அறியப்படுபவர் இயக்குனர் சங்கர். இவர் எடுக்கும் படங்கள் எல்லாமே 500 கோடி பட்ஜெட்டுக்கு மேல் எடுக்கப்படுபவை தான். இவர் இவரின் இளைய மகள் அதிதி. மருத்துவம் படித்துள்ள அதிதி சினிமா துறையின் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக நடிக்க வந்துள்ளார். இவர் முதல் படமாக தற்போது கார்த்தியுடன் இணைந்து விருமன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர், டீசர் அனைத்தும் வெளியாகிய மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதற்கு முன்பாகவே இந்த படத்தில் இருந்து கஞ்சா பூ கண்ணால என்ற பாடல் வெளியாகியிருந்தது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

ஷங்கர் மகள்ன்னு யாரும் தூக்கி கொடுக்கல..மோசமாக விமர்சித்தவர்களை விட்டு விளாசிய அதிதி | Aditi Shankar 1

மதுரைக்கார பெண்ணாக நடித்துள்ள அதிதி இந்தப் பாடலில் பாவாடை தாவணியில் தோன்றி ஆடி இருக்கிறார். இந்தப் பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருந்தது. பாவாடை தாவணியில் கிராமத்து பெண்ணாக அழகாக தோன்றியதால் இவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகமானது. தற்போது அதிதி தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். தனது முதல் படம் வெளியாவதற்கு முன்பாகவே இரண்டாவது படத்தில் கமிட்டாகி இருக்கிறார் அதிதி. மேலும் செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு பாடலில் நடனம் ஆடியது, மதுர வீரன் பாடலை சூப்பர் சிங்கர் ராஜலெட்சுமி பாடியதை நீக்கிவிட்டு அதிதியை பாட வைத்தது என பலவித விமர்சனங்கள் இவர் மீது தொடரந்து எழுந்தது. இயக்குனர் சங்கரின் மகள் என்பதற்காக இவ்வளவு சலுகை காட்டப்படுகிறதா? என்றும், எளிதாக ஏணியில் ஏறி வந்து விடுகிறார்கள் என்றும் இவர் மீது விமர்சனங்கள் எழுந்தது. மீசையை முறுக்கு படத்தின் ஹீரோயின் ஆத்மிகாவும் இந்த கருத்தை தான் கூறியிருந்தார். சினிமாவில் நடக்கும் நெப்போடிசம் என்று பலரும் தங்களது கருத்தை பதிவிட்டு வந்தனர்.

தற்போது இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் அதிதி தக்க பதிலடி ஒன்றை கொடுத்திருக்கிறார். இயக்குனர் சங்கரின் மகள் என்பதற்காகவே தனக்கு எல்லாம் தனக்கு கொடுத்துவிடவில்லை, தன்னுடைய உழைப்பால் தான் இந்த இடத்திற்கு வந்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். மேலும் தான் 5 வயதில் தொடங்கி எட்டு வருடங்களாக கர்நாடக சங்கீதம் கற்று வந்ததாகவும், வெஸ்டர்ன், இந்துஸ்தானி இசைகளை முறையாக கற்றுக் கொண்டதாகவும், எனக்கு பாட பிடிக்கும் நடித்த பிடிக்கும் என்பதால் டாக்டர் துறையிலிருந்து சினிமாத்துறைக்கு வந்ததாகவும் கூறினார். இந்த ஆசையை தந்தையிடம் கூறிய போது அவரும் இதற்கு சம்மதித்ததார்,கவர்ச்சியாக நடிக்க கூடாது என்றும் தனக்கு அறிவுரை வழங்கினார், அதனால் ஹோம்லியான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடிப்பேன் என்றும் அவர் கூறினார். மேலும் ஷங்கரின் மகள் என்பதாலேயே எனக்கு கொடுத்துவிடவில்லை என்றும் பேசினார். சமீப காலமாக தொடர்ந்து அவர் மீது விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் அவர் இவ்வாறு காட்டமான பதிலடியை கொடுத்திருக்கிறார் அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

 

Youtube Video Code Embed Credits: Dinamalar

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்