பிக்பாஸ் முடிந்தவுடன் நேராக ஸ்மோக்கிங் ரூம் சென்று வீடியோ எடுத்த ADK மற்றும் அசீம்.!

வெளியிட்டது

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் ஏடிகே மற்றும் அசீம் இருவரும் இணைந்து மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று அங்கு ஸ்மோக்கிங் ரூமில் இருந்து வீடியோ எடுத்து அதை தற்போது வெளியிட்டு இருக்கின்றனர். பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி 105 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தற்போது அசீம் டைட்டிலை வென்றிருக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகியவர்களுக்கு இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களே கிடைத்திருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கி 105 நாட்களை நிறைவடைந்து இருக்கிறது. 21 போட்டியாளருடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பதினாறு போட்டியாளர்கள் வெளியேறிவிட, இறுதியில் ஐந்து போட்டியாளர்களுடன் கடைசி வாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் முடிந்தவுடன் நேராக ஸ்மோக்கிங் ரூம் சென்று வீடியோ எடுத்த ADK மற்றும் அசீம்.! 1
இறுதி வாரத்தில் கதிரவன் மூன்று லட்சத்துடன் வெளியேற, அவரைத் தொடர்ந்து அமுதவாணன் பதினோரு லட்சத்து 75 ஆயிரத்து எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினார். பின்னர் மிட் வீக் எவிக்‌ஷன் என்று சொல்லி மைனாவை பிக்பாஸ் வெளியேற்றிவிட மீதம் மூன்று பேர் மட்டுமே இறுதிப்போட்டியில் இருந்தார்கள். அசீம், விக்ரமன், ஷிவின் என மூன்று பேருமே மிகவும் கடுமையான போட்டியாளர்களாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அசீம் முதலிடத்தை பிடித்தார். அவருக்கு 50 லட்ச ரூபாய் பரிசு தொகையுடன் காரும் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பிக்பாஸ் முடிந்த பின்னர் மீண்டும் அந்த வீட்டிற்கு சென்றுள்ள அசீம் மற்றும் ஏடிகே இருவரும் அதிக நேரம் செலவிட்ட ஸ்மோக்கிங் ரூமுக்கு சென்று அங்கு ஒரு செல்பி வீடியோவை எடுத்து அதை பகிர்ந்து இருக்கின்றனர்.

அந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த ஏடிகே, விளையாட்டு கடைசியில் விளையாட்டு தான். நாங்கள் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ஒரு குடும்பமாக இணைந்து இருக்கின்றோம். எங்களுக்குள் எவ்வளவோ வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகள் இருந்தாலும் நாங்கள் இருவரும் சிறந்த நட்பை உருவாக்கினோம். இந்த வீடும் அதைத்தான் எதிர்பார்க்கிறது. கிரிக்கெட் மேட்ச் எப்படி நடக்குமோ அப்படித்தான். நாள் இறுதியில் நாங்கள் நண்பர்கள், நீங்கள் பார்க்கும் இந்த இடத்தில் தான் நாங்கள் இருவரும் அதிக நேரம் செலவழித்தோம் என்று ஸ்மோக்கிங் ரூமில் இருந்து வீடியோவை பகிர்ந்து இருக்கிறார் ஏடிகே. அந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது..! நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்