விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் ஏடிகே தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். மேலும் விக்ரமன் குறித்து பதிவு ஒன்றையும் போட்டு இருக்கிறார். வெளியேறிய போது விக்ரமனை ஏன் புறக்கணித்தேன் என்கிற காரணத்தையும் அவர் முதன்முறையாக கூறியிருக்கிறார். பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் ஏழு நாட்களே மீதம் இருக்கும் நிலையில் தற்போது ஆறு போட்டியாளர்கள் போட்டியிட்டு வருகின்றனர். இதில் இந்த வாரம் ஒரு போட்டியாளர் பெட்டி டாஸ்க்கில் வெளியேற்றப்பட்டால் மீதம் இருக்கும் ஐந்து பேரை வைத்து பைனலிஸ்டாக தேர்வு செய்ய பிக்பாஸ் குழு திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் வெளியேறிய ஏடிகே தற்போது வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். மேலும் வெளியேறிய போது விக்ரமனை புறக்கணித்ததாக எழுந்த சர்ச்சைக்கும் அவர் தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டள்ளது.

அமுதவாணன் ஏற்கனவே டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்று இருப்பதால் மீதம் இருக்கும் ஐந்து பேரில் ஒருவர் மட்டும் வெளியேற இருக்கிறார்கள். அவரும் வெளியேறிவிட்டால் அமுதவாணனுடன் சேர்த்து 5 பேர் ஃபைனலுக்கு செல்ல இருக்கிறார்கள். தற்போது அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா ஆகிய 6 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள். இதில் பெட்டியை எடுக்க கதிரவன் ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது. எனவே அவர் பெட்டியுடன் இந்த வாரம் வெளியேறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் வெளியேறிய ஏடிகே தற்போது தனது முதல் பதிவை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர் தமிழ்நாடு மக்களுக்கும் தமிழ் பேசும் சகோதர சகோதரிகளுக்கும் நான் என்றும் உண்மையாக இருப்பேன். விஜய் தொலைக்காட்சிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் என்னுடைய திறமையை வெளிக்கொண்டு வந்ததற்காக மிகப்பெரிய நன்றி சொல்கிறேன். தனக்காக தொப்பியை பரிசளித்த கமலஹாசனுக்காகவும் தன்னுடைய நன்றியை சொல்கிறேன். சாக்ரிஃபைஸ் டாஸ்க்கில் நான் செய்த இந்த முடியை எடுக்கப் போவதில்லை. இதை அப்படியே வைத்துக் கொள்ளப் போகிறேன். மேலும் தனக்கு கொடுக்கப்பட்ட பட்டமான ஊர் கிழவி என்கிற ஹேஷ்டேக்கை பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு அதில் ஒரு பாடல் செய்யப் போகிறேன் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் விக்ரமனை பற்றி பதிவு ஒன்றையும் போட்டு இருக்கிறார் ஏடிகே. வெளியே செல்லும்போது விக்ரமனை கண்டு கொள்ளவில்லை என்ற சர்ச்சை எழுந்தது.
அது குறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் ஏடிகே, விக்ரமன் என்னுடைய உண்மையான நண்பன். அவருடைய நட்பை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன். நான் வெளியேறும் போது எனக்கு கலவையான எமோஷன் இருந்தது. மேலும் அவரை நான் வேண்டுமென்றே புறக்கணிக்கவில்லை என்று பதிவிட்டு இருக்கிறார். ஆனால் அந்த பதிவுகளுக்கு கீழே நீங்கள் வேண்டுமென்றே தான் புறக்கணித்தீர்கள் அது நன்றாக தெரிந்தது. உங்களுக்காக நின்ற நண்பனை எப்படி புறக்கணிக்கலாம் என்று ஏடிகேவுக்கு எதிராக பிக்பாஸ் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். Watch the Video Below.!
Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O