“இது Low-budget டினா….ஏஜெண்டாக மாறிய அர்ச்சனா”!!

வெளியிட்டது

சீரியல் ஒளிபரப்புவதில் கோடிக்கட்டி பறந்தது சன் டிவி. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக கடந்த 10 ஆண்டுகளில் மொத்தமாக அந்த இடத்தை இழந்து விட்டது சன் டிவி. அதற்கு முக்கிய காரணம் பல்வேறு புது வகையிலான தொடர்களுடன் களமிறங்கிய விஜய் டிவியே. காண காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி, ராஜா ராணி போன்ற பல வெற்றி நாடகங்களை ஒளிபரப்பி இப்பொது முதல் இடத்தில உள்ளது விஜய் டிவி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"இது Low-budget டினா....ஏஜெண்டாக மாறிய அர்ச்சனா"!! 1

இப்போதைய ரசிகர்களின் பிடித்தமான தொலைக்காட்சி தொடர்கள் என்றால் பலரும் விஜய் டிவியில் ஒளிபாப்பாகும் ஏதோ ஒரு தொடரை தான் கூறுவார்கள். அவ்வாறு பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தொடர்களில் பாரதி கண்ணம்மா தொடரும் ஒன்று.  எப்போதும் டிஆர்பியில் முதலில் இல்லை என்றாலும் எதோ ஒரு இடம் பெற்றுவிடும். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இந்த தொடர் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது.

அதே போல விஜய் டிவியின் மற்றொரு முன்னணி தொடர் “ராஜா ராணி 2”. முதல் சீசன் மிக பெரிய அளவில் வெற்றியடைந்த பிறகு இப்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஹிந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தமிழில் “என் கணவன் என் தோழன்” என்ற பெயரில் விஜய் டிவியிலேயே நீண்ட ஆண்டுகள் முன்பு ஒளிபரப்பான இந்த தொடரை மீண்டும் தமிழில் மறுக்கம் செய்து ஒளிபரப்பி வருகிறார்கள். இதற்கும் எப்போதும் போல ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

சில காலமாக அறிமுகமாகி வெற்றியடைந்த கான்செப்ட் சீரியல் சங்கமம். அந்த வகையில் இப்பொது பாரதி கண்ணம்மா – ராஜாராணி சங்கமம் நடைபெற்று வருகிறது. ராஜா ராணி தொடரில் நாயகியை விட மிகவும் பிரபலமாக இருப்பது வில்லியாக நடிக்கும் அர்ச்சனா தான். குடும்பத்தில் எதாவது ஒரு வகையில் பிரச்சனையை செய்து வரும் கதாபாத்திரமாக வந்தாலும், நகைச்சுவையுடன் கலந்து வரும் கதாபாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்பொது அர்ச்சனா நடித்துள்ள ஒரு சின்ன வீடியோ ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர் விஜய் தொலைக்காட்சி நிறுவனம். விக்ரம் படத்தில் வரும் ஏஜென்ட் டினா போலவே மிஷன் செய்வது போல அர்ச்சனா செய்யும் அலப்பறை பார்க்கப்போருக்கு மிகவும் சிரிப்பு வரவைக்கும் வகையில் உள்ளது. இந்த வீடியோ இப்பொது சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Video Courtesy – Vijay television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்