இரண்டு நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி இருந்த அகிலன் திரைப்படம் குறித்து தற்போது ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். அவர் கூறியதாவது, “இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் அகிலன், கப்பல்கள் வழியாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் சில வேலைகளை டான் ஒருவர் செய்து வருகிறார். அவர் நேரடியாக எந்த செயலையும் செய்ய மாட்டார் அவருக்கு ஹீரோ ஜெயம் ரவி உதவி செய்து கொண்டிருக்கிறார் ய. போதைப்பொருள் கடத்தல் போன்ற பல உதவிகளை ஹீரோ செய்து கொண்டிருக்கிறார். ஒரு சப்பையான ஐடியாவை வைத்துக்கொண்டு இவர் இது போன்ற இல்லீகல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு பிளாஷ்பேக் என்று ஒன்று காட்டுகிறார்கள்.அது அதைவிட கேவலமாக இருக்கிறது”. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திடீரென ஒரு நாள் ஹீரோ 200 கோடி சம்பாதிக்கிறார் . அதை வைத்து ஒரு கப்பல் வாங்குகிறார். இந்த காட்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தபோது படம் முடிவதற்குள் நாம் செத்துப் போய் விடுவோம் என்று கையில் காலில் விழுந்து கதறிக் கொண்டிருந்தபோது அவர்களே வணக்கம் போட்டு முடித்து விட்டார்கள். படம் முழுவதும் லாரி லாரியாக வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கிறது. கண்டையினர் கதவுகளை திறந்து மூடிக் கொண்டிருக்கிறார்கள். அங்கங்கே ரெய்டு போகிறார்கள், படத்தின் கதை ஒன்றும் புரியவில்லை, சரி வில்லனாவது வலுவாக இருப்பார் என்று பார்த்தால் யார் வில்லன் என்றே தெரியவில்லை. திடீரென ஒருவன் நல்லவனாக இருக்கிறான் அவன் திடீரென வில்லனாக மாறுகிறான், திரை பிரபலங்களுக்கு பின்னால் குடையை பிடித்துக் கொண்டு ஒரு உதவியாளர் சுற்றுவார். அதுபோல ஹீரோயின் தேவையில்லாமல் ஹீரோ கூடவே சுற்றிக் கொண்டிருக்கிறார். இரண்டாவது பாதியில் ஜெயம் ரவியின் அப்பா என்று ஒருவரை காட்டுகிறார்கள் அவரின் ஹேர்ஸ்டைலை பார்த்த உடனே நமக்கு குபீரெனை சிரிப்பு வந்து விடுகிறது. இதனால் சிரிப்புக்கு என்று தனி ட்ராக் அவர்கள் வைக்கவில்லை போல.
பின்னர் கப்பல் வாங்கியதற்கு தமிழ் அன்னை என்று பெயர் வைத்திருந்தார்கள். அதை பார்த்தவுடன் ஒரு நிமிடம் கருத்து சொல்லி சாகடிக்க போகிறார்கள் என்கிற உணர்வு ஏற்பட்டது. கண்டைனர் திறந்து திறந்து மூடுவதை தவிர வேறு எதுவுமே செய்யவில்லை. ஒரு 20 சீனை வைத்துக்கொண்டு தொடர்பு இல்லாத கதையை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கருத்து சொல்கிறேன் பேர்வழி என்ற பஞ்சம், அகதி இதெல்லாம் என்னவென்று தெரியுமா என்று ஆரம்பித்து விட்டார்கள். இவர்கள் சொன்ன கருத்தை கேட்டு கேட்டு நான் கறுத்துப் போய்விட்டேன். அந்த படத்தில் ஆக்சிஜன் இல்லாமல் ஒரு லாரியில் ஏற்றி சிலரை கடத்துவார்கள். அது போல இந்த படம் எடுத்தவர்களை ஆக்சிஜன் இல்லாத ஒரு லாரியில் ஏற்றி வடகொரியாவிற்கு அனுப்பி விட வேண்டும் என்று தனது காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார் ப்ளூ சட்டை மாறன். நீங்களும் அவரின் வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Tamil Talkies