சின்னத்திரை ஜோடிகளிலேயே மனம் கவர்ந்த ஜோடிகளில் ஒருவர் தான் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ். சீரியல்களில் நடிக்கும் ஜோடிகள் நிஜ வாழ்வில் இணையும் போது ரசிகர்கள் அவர்களை ரசித்துப் பார்க்கின்றனர். அந்த வகையில் அனைவருக்கும் பிடித்தமான ஜோடிகளில் ஒருவராக இருப்பவர்கள் ஆல்யாவும், சஞ்சீவும் இவர்கள் இருவரும் செய்யும் குறும்பு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாவது வழக்கம். ராஜா ராணி சீரியலில் செம்பா, கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ராஜா ராணி சீரியல் முடியும் போது ஆல்யா கர்ப்பமாக இருந்தார். அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ஐலா சையது எனப் பெயரிட்டனர். சீரியலில் இருந்து சிறிது காலம் ஒதுங்கியிருந்த ஆல்யா யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி பல Vlogs வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். பிறகு ராஜா ராணி 2 சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போது இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆனார் ஆல்யா. இதனால் மீண்டும் சீரியலில் இருந்து விலகி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு அர்ஷ் என்று பெயர் வைத்துள்ளார். தனது குழந்தைகளுடன் இணைந்து அவர் செய்யும் குறும்பு வீடியோக்களை யூடியூப் பக்கத்தில் பகிர்ந்து வருவது வழக்கம்.
அந்த வகையில் இன்று ஆல்யா ஒரு வீடியோவை பதிவேற்றி உள்ளார். அதில் ஐலாவை முதன் முறையாக பள்ளியில் சேர்த்துள்ளார் ஆல்யா. ப்ளே ஸ்கூல் எனப்படும் அந்த பள்ளியில் படிப்பு, விளையாட்டு என ஜாலியாக இருக்கும். பள்ளியில் நுழைந்தவுடன் பயந்து அழுத ஐலா பின்னர் சமத்தாக பள்ளிக்கு செல்கிறார். செம்ம Cute ஆக ஐலா பள்ளிக்குச் செல்லும் அந்த அழகான வீடியோவை நீங்களும் காண..Watch the below video…
Youtube Video Code Embed Credits: Sanjiev & Alya