பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதிக்கட்டங்களை எட்டி வரும் நிலையில் இந்த வாரம் பிக் பாஸில் ரவீனா மற்றும் நிக்சன் இருவரும் வெளியேறியிருக்கின்றனர். மீதம் எட்டு போட்டியாளர்கள் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாட இருக்கின்றனர். நிக்சன் வெளியேறியது குறித்து நெட்டிசன்கள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வரும் நிலையில் தற்போது முன்னாள் போட்டியாளராக இருந்த ஐஷுவின் தந்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் காரணமே இல்லாமல் மகிழ்ச்சியாக வைப் பண்ணுவதாக கூறி எஸ்ஜே சூர்யாவின் ரியாக்ஷன் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். நிக்சன் வெளியேறியது குறித்து தான் இப்படி மறைமுகமாக தனது மகிழ்ச்சியை ஐஷுவின் தந்தை வெளிப்படுத்தியிருப்பதாக நெட்டிசன்கள் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனால் அது குறித்து தான் அவர் இது வெளியிட்டாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.
நிக்சன் பிக்பாஸில் இருந்து வெளியேறி விட்டார் என்கிற செய்தி வந்த பின்பு அவர் இந்த பதிவை போட்டு இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் இந்த செய்தி வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் போட்டியாளராக இருந்த ஐஷு நன்றாக விளையாடாமல் போனதற்கு நிக்சன் தான் காரணம் என்று வெளியில் பரவலாக பேசப்பட்டு வந்தது. இதை உறுதி செய்யும் விதமாக ஐஷுவும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் எந்த பேட்டியும் அளித்து விளக்கம் கொடுக்காமல் மௌளனம் சாதித்து வருகிறார். இந்த நிலையில் நிக்சன் வெளியேறியதை கொண்டாடும் விதமாகத்தான் ஐஷுவின் தந்தை இவ்வாறு பகிர்ந்து இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.