Categories: சினிமா

வீட்டில் குடில் அமைத்து கிறிஸ்துமஸை கொண்டாடிய ரஜினி குடும்பம்.! ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படங்கள்.!

வெளியிட்டது

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தங்களது வீட்டில் மகன்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு இரு மகள்கள் இருக்கிறார்கள். மூத்த மகள் ஐஸ்வர்யா, இளைய மகள் சௌந்தர்யா இவர்களும் திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறார்கள். இருவரும் படம் இயக்குவது, தயாரிப்பது என்று பிசியாக இருந்து வருகின்றனர். இதில் ஐஸ்வர்யா பிரபல நடிகரான தனுசு உடன் காதல் ஏற்பட்டு பின்னர் அவரை திருமணம் செய்து கொண்டார். 18 ஆண்டுகள் நட்சத்திர தம்பதிகளாக வாழ்ந்த இவர்கள் கடந்த ஜனவரி மாதம் பிரிந்து விட்டதாக சமூக வலைதளங்களில் அறிவித்தனர். இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

வீட்டில் குடில் அமைத்து கிறிஸ்துமஸை கொண்டாடிய ரஜினி குடும்பம்.! ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படங்கள்.! 1


பிரிவுக்குப் பின்னர் மூத்த மகன் யாத்ராவின் பள்ளியில் நடந்த ஒரு விழாவின்போது இருவரும் சந்தித்துக் கொண்டனர் .அதன் பின்னர் இருவரும் சந்திக்கவே இல்லை. இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க பல தரப்பினரும் முயற்சி செய்த நிலையில் எதுவும் பலனளிக்காமல் போனது. தனுஷின் பிறந்த நாளுக்கு ஐஸ்வர்யா மீண்டும் ஒன்றாக இணைவார் என்று கூறப்பட்டது, ஆனால் எதுவுமே நடக்கவில்லை, ஐஸ்வர்யா தனுசுக்கு ஒரு வாழ்த்து கூட சொல்லவில்லை. ஐஸ்வர்யா தனது மகன்களுடன் ரஜினிகாந்த் வீட்டிலேயே வாழ்ந்து வருகிறார். யாத்ரா மற்றும் லிங்கா அவ்வப்போது சென்று தனது தந்தையை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் ஐஸ்வர்யா தனது மகன்களுடன் கிறிஸ்மஸ் கொண்டாடிய புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

வீட்டில் கிறிஸ்துமஸ் மரம், ஸ்டார், கேண்டில் டின்னர், சான்டா கிளாஸ் என வீட்டக அலங்கரித்து அவர் நேற்றைய நாளை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படத்தை தனது instagram பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் ஐஸ்வர்யா. இந்த புகைப்படத்தை பார்த்த ரஜினி ரசிகர்கள் தலைவர் எம்மதமும் சம்மதம் என்று தன் மகள்களையும் பேரன்களையும் வளர்த்து வருவதாக கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர். அந்தப் புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்