நேற்று முதல் இணையத்தில் வைரலாகி வந்த ஒரு செய்தி தான் ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் அர்ஜுன் தாஸ் இருவரும் காதலித்து வருவதாக வந்த செய்தி. இந்த செய்தி நேற்று முதல் இணையத்தில் வைரலானது. பலரும் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா லட்சுமி அதற்கு விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் அதற்கு முன்பாகவே விஷாலின் ஆக்ஷன் என்கிற படத்தில் நடித்திருக்கிறார். அதன்பின்னர் ஜகமே தந்திரம் படத்தில் நடித்திருந்தார். பல மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு பொன்னியின் செல்வனில் பூங்குழலியாக நடித்த பின்னர் ரசிகர் பட்டாளம் பெருகியுள்ளது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி. இந்த படத்தில் குஸ்தி வீராங்கனையாக நடித்து அசத்தியிருந்தார் ஐஸ்வர்யா. இந்த நிலையில் நேற்று இன்ஸ்டாகிராமில் அர்ஜுன் தாஸுடன் இருக்கும் ஒரு புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருந்தார்.

அர்ஜுன் தாஸ் 2012 ஆம் ஆண்டு ஒரு ஷார்ட் ஃபிலிம் இல் நடித்து புகழ்பெற்றார். பின்னர் இவர் கைதி படத்தில் வில்லனாக அன்பு கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது. இவரது குரலுக்கே பல ரசிகர்கள் இருக்கிறார்கள். பின்னர் இவர் அந்தகாரம், ஆக்சிஜன் போன்ற படங்களில் நடித்தார். மேலும் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் ஆக நடித்த சூர்யாவின் கூட்டாளிகளில் ஒருவராகவும் நடித்திருக்கிறார். தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். குறிப்பாக கும்கி பாகம் இரண்டில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நேற்று ஐஸ்வர்யா லட்சுமி அர்ஜுன் தாஸுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை ஹார்டின் எமோஜி உடன் சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இந்த பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே பூதாகரமானது. பலரும் ஐஸ்வர்யா லட்சுமியின் கமெண்டில் சென்று இருவரும் காதலிக்கிறீர்களா என்ற கேள்வியை எழுப்பி வந்தனர். இந்த நிலையில் தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு ஒன்றை போட்டு விளக்கம் அளித்து இருக்கிறார்.
அதில் அவர் என்னுடைய கடைசி பதிவு இந்த அளவிற்கு பூதாகரமாகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் இருவரும் சந்தித்துக் கொள்ள விரும்பினோம். ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். அதைத்தான் நான் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தேன். எங்களுக்குள் எதுவுமே கிடையாது. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். நேற்றிலிருந்து அர்ஜுதாஸின் ரசிகர்கள் எனக்கு மெசேஜ் அனுப்பி கொண்டிருக்கிறார்கள். நான் உங்களுக்கு உறுதி ஒன்றை அளிக்கிறேன். அவர் என்னுடையவர் இல்லை, அவர் உங்களுடையவர் மட்டுமே என்று ஒரு பதிவை போட்டு விளக்கம் அளித்து இருக்கிறார். இதன் மூலம் அர்ஜுன் தாஸ் உடனான காதல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.