ஐஸ்வர்யா ராயின் மகளின் 11 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. அந்த பிறந்தநாள் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஐஸ்வர்யா ராய்க்கு எதிராக சிலர் மோசமாக கருத்து தெரிவித்து வந்தனர். அதற்கு ஐஸ்வர்யாராயின் ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஐஸ்வர்யா ராய். இவர் உலக அழகியாகவும் இருந்திருக்கிறார். தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் நடித்த ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. நந்தினி கதாபாத்திரத்தில் இவர் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தனது கண்ணாலேயே நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராய்.

தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திலும் ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரம் மிக முக்கியமானது. அதை மிகவும் நேர்த்தியாக நடித்து முடித்து இருக்கிறார். அவர் மேலும் தனது மகளுடன் அடிக்கடி சென்னையில் வந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்து இருந்தார். ஐஸ்வர்யா ராய்க்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் பெயர் ஆராத்யா. அவருக்கு இன்று 11வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அந்த புகைப்படங்களை ஐஸ்வர்யா ராய் தனது instagram பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அதில் தன் மகளின் உதட்டில் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை அவர் பகிர்ந்து இருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ஐஸ்வர்யா ராயை திட்ட தொடங்கினர்.
மகளுக்கு இங்கே தான் முத்தம் கொடுப்பீர்களா? இது இந்திய கலாச்சாரமே கிடையாது இதையெல்லாம் என்றைக்கு மாற்றிக் கொள்ளப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்ப தொடங்கினர். மேலும் அவருடைய ஹேர் ஸ்டைலையும் மாற்றுங்கள். அவர் வளர்ந்து விட்டார் என்பதை உணருங்கள், மேலும் வெளியில் செல்லும் பொழுது அவரின் கையை பிடித்துக் கொண்டு செல்வதை நிறுத்தங்கள் என்று பலர் தொடர்ந்து ஐஸ்வர்யாராய்க்கு எதிராக கமெண்ட்களை போட்டு வந்தனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐஸ்வர்யாராயின் ரசிகர்கள் தாய்மையை கொச்சைப்படுத்தாதீர்கள், அம்மாவிற்கும் மகளுக்கும் இடையிலான இந்த அன்பை எடை போடுவதை நிறுத்துங்கள், கேவலமாக விமர்சிக்காதீர்கள் என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.