பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த ஐஸ்வர்யா ராயின் கையை பிடித்து விக்ரம் அழைத்து வந்து தமிழில் பேச வைத்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த முப்பதாம் தேதி வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு உலக அளவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மூன்று நாள் முடிவில் படம் 200 கோடி வசூலை பெற்றிருந்தது. முதல் நாளிலேயே 80 கோடி வசூலையும், இரண்டாவது நாள் முடிவில் 150 கோடி வசூலையும், மூன்றாவது நாள் முடிவில் 200 கோடி வசூலையும் அள்ளி இருக்கிறது. இது விக்ரம், வலிமை போன்ற படங்களின் மூன்று நாள் வசூலை காட்டிலும் மிக அதிகம். வருகிற இரண்டு நாட்கள் விடுமுறை தினங்கள் என்பதால் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் படத்தை பார்க்க வந்த படக்குழுவினர், சென்னை சத்தியம் திரையரங்கிற்கு வந்தனர். இந்தப் படத்தில் நடித்திருந்த ஐஸ்வர்யாராய் தனது மகளுடன் வந்திருந்தார். ஜெயம் ரவி தனது மனைவியுடன் வந்திருந்தார். மேலும் இவர்களுடன் மணிரத்னம் சுஹாசினி விக்ரம், விக்ரம் பிரபு, திரிஷா, கார்த்தி என அனைவரும் வந்து படம் பார்த்திருந்தனர். அந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி இருந்தது. படம் முடிந்து வெளியே வந்த பின்னர் ஐஸ்வர்யாராயின் கையைப் பிடித்து ரசிகர்களிடம் அழைத்து வந்த நடிகர் விக்ரம், இவர் தற்போது தமிழில் பேசுவார் என்று ரசிகர்களிடம் சொன்னார். உடனே ஐஸ்வர்யாராய் நன்றி நன்றி என்று கூறிவிட்டு ரசிகர்களை பார்த்து கையசைத்தார். பின்னர் விக்ரம், ரசிகர்களிடம் எத்தனை முறை படம் பார்த்தீர்கள் என்று கேட்டார்.
அதற்கு அங்கிருந்தவர்கள் மூன்று முறை படம் பார்த்தோம் என்று சொல்ல அப்பொழுது மகிழ்ச்சியில் கைத்தட்டி சிரித்தார் ஐஸ்வர்யா ராய். விக்ரமின் இந்த கியூட் செயல் தற்போது வைரலாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..
Youtube Video Code Embed Credits: Little Talks