Categories: சினிமா

ஐஸ்வர்யா ராஜேஷின் 33வது பிறந்த நாள்.! நைட் பார்ட்டியில் மரண குத்தாட்டம் போட்ட ஐஸ்வர்யா.!

வெளியிட்டது

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். வீட்டில் கேக் வெட்டியும் பின்னர் இரவு நேரம் பார்ட்டி நடத்தியும் செம குத்தாட்டம் போட்டு இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. தனது எதார்த்தமான நடிப்பின் மூலமாக பலரில் உள்ளங்களை கவர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிகை என்பதைத் தாண்டி நமது பக்கத்து வீட்டில் இருக்கும் பெண் போல் இருப்பதால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு படத்தில் அறிமுகமாகி பின்னர், பல தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு படம் என்று சொன்னால் அது “காக்கா முட்டை” தான். இந்த படத்திற்குப் பின்னர் இவருக்கு ரசிகர் பட்டாளம் பெருகியது. அதன் பின்னர் அவர் பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, ஆறாவது சினம், மனிதன், தர்மதுரை போன்ற பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷின் 33வது பிறந்த நாள்.! நைட் பார்ட்டியில் மரண குத்தாட்டம் போட்ட ஐஸ்வர்யா.! 1

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் டிரைவர் ஜமுனா. பெண் டிரைவராக இருக்கும் ஒருவருக்கு ஏற்படும் இன்னல்கள் பற்றி இந்த படம் அழகாக எடுத்துக்காட்டியிருந்தது. இந்த படத்திற்கு பின்னர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். பெண்களை மையப்படுத்தும் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற மலையாள மொழி படத்தை தமிழாக்கம் செய்து அதில் நடித்து வருகிறார். விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் சில மலையாள படங்களிலும் கமிட்டாகி இருக்கிறார். சொப்பன சுந்தரி, ஃபர்ஹானா, துருவ நட்சத்திரம் போன்ற படங்களிலும் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நேற்று பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு அவர் தனது வீட்டிலேயே கேக் வெட்டி கொண்டாடியிருந்தார். மேலும் இரவு நேர பார்ட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


பார்ட்டியில் தனது அண்ணன் மணிகண்டன் ராஜேஷ் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து அவர் பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். 10 கேக்குகளுக்கும் மேல் வாங்கி அவரது பிறந்தநாளுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் அவரது நண்பர்கள். அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய பிறந்தநாளுக்காக வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி, இந்த பிறந்த நாளை மேலும் சிறப்பாக்கிய உங்கள் அன்பிற்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. என்னுடைய குறும்புக்கார நண்பர்களுக்கும் நன்றி என்று அவர் பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை பல லட்சம் மக்கள் பார்த்து, லட்சக்கணக்கில் லைக்குகளும் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

YouTube Video Code Embed Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்