சென்னை மாமல்லபுரத்தில் இன்று 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதனை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார். இதில் 188 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டு இருக்கிறது. சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசியாவில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சென்னையில் நடத்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் திட்டமிட்டு அதற்காக 100 கோடியை ஒதுக்கி இருந்தார். இது சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தற்போது பிரதமர் மோடி தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் மோடியுடன் ஆளுநர் ரவி மற்றும் மத்திய அமைச்சர் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் முக்கிய பிரபலங்கள் பலருக்கும் இந்த போட்டியின் துவக்க விழாவில் கலந்துகொள்ள அழைப்பு அளிக்கப்பட்டு இருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-க்கும் போட்டியில் துவக்க விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் அவரது மகள் ஐஸ்வர்யாவும் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு முன் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ரஜினி அருகில் உதயநிதி ஸ்டாலினும், ஐஸ்வர்யா அருகில் முதலமைச்சர் மு க ஸ்டாலினின் மனைவி துர்காவும் அமர்ந்திருந்தனர். தனது அப்பாவுடன் காரில் எடுத்துக்கொண்ட செல்ஃபியை ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
தனுஷ் உடனான பிரிவுக்குப் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது தந்தையுடன் அதிகமாக பொதுவெளியில் கலந்து கொள்ளவில்லை. நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனது தந்தையுடன் அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இன்று தனுஷுக்கு பிறந்தநாள் என்பதால் ஐஸ்வர்யா வாழ்த்து தெரிவிப்பார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் அவர் தனது தந்தையுடன் ஒலிம்பியாட் நிகழ்ச்சிகளை காண நேரு வழங்கி இருக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.