சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளும், பிரபல இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டியிருக்கிறார். அந்த வீட்டிற்கு சூப்பர் ஸ்டார் தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் வருகை தந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘3’ படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சமீபத்தில் ‘லால் சலாம்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இருப்பினும் தொடர்ந்து படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார் ஐஸ்வர்யா. மேலும் தனது கணவர் தனுஷுடன் சில வருடங்களுக்கு முன்பு பிரிவு ஏற்பட்ட நிலையில் அவரிடம் இருந்து விவாகரத்து கோரி உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருக்கிறார். இது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கிடையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சித்தார்த்தை ஹீரோவாக வைத்து புது படம் ஒன்றை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிதாக வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார். அந்த வீட்டின் உட்புற வேலைகள் முடிந்திருக்கும் நிலையில், தனது தந்தை, தாய் மற்றும் மகன்களை அழைத்துச் சென்று வீட்டை சுற்றி காண்பித்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மகள் கட்டியிருக்கும் வீட்டை ரஜினிகாந்த் ரசித்து ரசித்து பார்வையிடுகிறார். அந்த வீடியோவை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O