அஜய் கிருஷ்ணாவின் 25வது பிறந்தநாள்.! குடும்பத்துடன் பர்த்டே கொண்டாடிய அஜய் கிருஷ்ணா..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. அதிலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர்.

அஜய் கிருஷ்ணாவின் 25வது பிறந்தநாள்.! குடும்பத்துடன் பர்த்டே கொண்டாடிய அஜய் கிருஷ்ணா..! 1
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெறுபவர்கள் விரைவில் வெள்ளித்திரையில் பிண்ணனி பாடகர்களாக ஜொலித்து வருகின்றனர். அப்படி படங்களில் பாடும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் கூட மேடைக் கச்சேரிகள், கான்செர்ட் போன்றவற்றில் பாடி பிரபலமாகி விடுகின்றனர்.

அந்த வகையில் பிரபலமான ஒருவர் தான் அஜய் கிருஷ்ணா. பேசுவதில் ஒருவரைப் போல் மிமிக்ரி செய்ய முடியும் ஆனால் பாடுவதில் ஒருவரைப் போல மிமிக்ரி செய்ய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் அஜய் கிருஷ்ணா.

பிரபல பிண்ணனி பாடகர் உதித் நாராயண் போலவே பாடி பலரின் உள்ளங்களை கொள்ளைக் கொண்டார்.

இவரின் திறமையைப் பார்த்த எஸ்பிபி கூட அஜய் கிருஷ்ணாவை புகழ்ந்து பாராட்டியுள்ளார். ஆனால் அஜய் அந்த சீசனில் வெற்றிப் பெற முடியவில்லை.


இருந்தபோதிலும், அடுத்தடுத்து அவருக்கு பல நிகழ்ச்சிகளில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. ஸ்டார்ட் மியூசிக் என்ற நிகழ்ச்சியிலும் பாடல்களை பாடி வருகிறார்.

அண்மையில் தனது காதலியான ஜெசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் அவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார்.

 

பின்னர் அஜய்க்கும் ஜெசிக்கும் ஆண் குழந்தை பிறந்து இருக்கும் செய்தியை அறிவித்திருந்தனர்.


இந்த நிலையில் நேற்று அஜய் கிருஷ்ணா தனது 25வது பிற்நதநாளை குடும்பத்துடன் இணைந்து கொண்டாடி இருந்தார்.

குடும்பத்துடன் வெளியில் சென்ற அவர் அனைவரையும் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று ட்ரீட் கொடுத்துள்ளார்.


மேலும் தனது மகனின் முகத்தை முதன்முறையாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்