குட்டி அஜய் பொறந்து இருக்கான்.! மகன் பிறந்த செய்தியை செம்ம Cute ஆக அறிவித்த அஜய் கிருஷ்ணா.!

வெளியிட்டது

சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டு மிகப்பிரபலமான அஜய் கிருஷ்ணாவுக்கு தற்போது மகன் பிறந்து இருக்கும் செய்தியை அவரது மனைவி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அறிவித்து இருக்கிறார். அஜய் கிருஷ்ணாவுக்கும் அவரது மனைவிக்கும் தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. விஜய் டிவி எளிய பின்னணியில் இருந்து வரும் பலருக்கும் வாழ்க்கை கொடுத்துள்ளது. விஜய் டிவியில் தங்களது வாழ்க்கையை தொடங்கிய பலர் இன்று வெள்ளித்திரையில் பிரபலங்களாக, நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் பாடிய பலரும் இன்று இளையராஜா, ஏ.ஆர் ரகுமான் ஆகியோரின் குழு இசையில் பாடத் தொடங்கி தற்போது தனியாக பாடல் பாடும் அளவிற்கு உயர்ந்துள்ளனர். பலர் சில படங்களிலும், ஆல்பங்களிலும் பாடி வருகின்றனர்.

குட்டி அஜய் பொறந்து இருக்கான்.! மகன் பிறந்த செய்தியை செம்ம Cute ஆக அறிவித்த அஜய் கிருஷ்ணா.! 1

அப்படி எளிய பின்னணியில் இருந்து வந்து புகழை அடைந்துள்ள ஒருவர்தான் அஜய் கிருஷ்ணா. சூப்பர் சிங்கரில் ஒரு போட்டியாளாரக கலந்து கொண்டார். சமீபத்தில் திருமணம் முடிந்த அவரின் மனைவி கர்ப்பமாக இருப்பதை instagram பக்கத்தில் மகிழ்ச்சியுடன் அறிவித்து இருந்தார். சூப்பர் சிங்கரில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் அஜய் கிருஷ்ணா. இவருக்கு ஒரு தனித் திறமை உண்டு. பேசுவதில் மிமிக்ரி செய்ய முடியும், ஆனால் பாடுவதை மிமிக்ரி செய்வது சிறிது கஷ்டமான காரியம். ஆனால் அஜய் கிருஷ்ணாவோ பிரபல பாடகர் உதித் நாராயணன் போலவே பல பாடல்களை பாடி மிமிக்ரி செய்துள்ளார். அந்த அளவிற்கு திறமையான ஒரு பாடகர் அஜய் கிருஷ்ணா. பின்னர் இவர் ஸ்டார் மியூசிக் என்னும் நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருந்தார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு சில நிகழ்ச்சிகளில் பிசியாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் அஜய் கிருஷ்ணா கடந்த மே மாதம் ஜெசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி 5 மாதங்கள் முடிந்தபோது தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை அவர் instagram-யில் பகிர்ந்து இருந்தார். அதன் பின்னர் அவர் பெரிய அளவில் புகைப்படங்களை வெளியிடவில்லை. சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டு மிகப்பிரபலமான அஜய் கிருஷ்ணாவுக்கு தற்போது மகன் பிறந்து இருக்கும் செய்தியை அவரது மனைவி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அறிவித்து இருக்கிறார். பிப்ரவரி 12 முதல் நாங்கள் இப்போது அதிகாரப்பூர்வமாக எங்கள் சிறிய மகனின் பெற்றோராகிவிட்டோம்.

நமக்காக ஒரு சிறிய குடும்பத்தை உருவாக்கி தந்த நம் குட்டி மனிதனுக்காக மிக்க நன்றிகள். எங்கள் மீது அன்பு காட்டும் அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.! அஜய் கிருஷ்ணாவுக்கும் அவரது மனைவிக்கும் தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. குட்டி அஜய் பிறந்து விட்டதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்