விஜய் டிவி நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகிய அஜய் கிருஷ்ணா – ஜெஸ்ஸி ஜோடி.! என்ன ஆச்சு தெரியுமா?

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மிஸ்டர் அன்ட் மிஸஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் இருந்து அஜய் கிருஷ்ணாவும் அவரது மனைவி ஜெஸ்ஸியும் விலகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்த நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் எளிய பிண்ணனியில் இருந்து சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சிக்கு வந்தவர்தான் அஜய் கிருஷ்ணா. சூப்பர் சிங்கரில் பாடி தன் திறமை மூலம் மக்களின் பேராதரவைப் பெற்றுள்ளார். இவர் பிரபல பிண்ணனி பாடகர் உதித் நாராயணன் அவர்களின் குரலை மிமிக்ரி செய்து அவர் போலவே பாடி அசத்துவார். பாட்டுத் துறையில் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தால் உதித் நாராயணன் போலவே பாடி மிமிக்ரி செய்து அசத்தினார்.

விஜய் டிவி நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகிய அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி ஜோடி.! என்ன ஆச்சு தெரியுமா? 1

ஒரு முறை எஸ்பிபி அவர்களே அஜயின் திறமையை பார்த்து வியந்து போனார். நான் உதித்தை சந்திக்கும் போது உங்களை போல மிமிக்ரி செய்யும் ஒருவன் இருக்கிறான் என்று உதித்திடம் கூறுவேன் என்று எஸ்பிபி கூறினார்.எளிய பிண்ணனியில் இருந்து வருபவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி அவர்களை வெள்ளித்திரையில் பிண்ணனி பாடகர்களாக மாற்றியுள்ளது சூப்பர் சிங்கர். அந்த வகையில் அஜய்க்கும் நிறைய வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

அஜய் கிருஷ்ணாவுக்கும் ஜெஸ்ஸி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் இருவரும் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவர்கள் தொடர்வார்களா? இல்லையா? என்ற கேள்வி எழுந்த நிலையில் இருவரும் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்துள்ளனர். இதனால் மிஸ்டர் அன்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இருந்து இருவரையும் நடுவர்களான கோபிநாத் மற்றும் தேவதர்ஷினி இருவரும் அஜய்- ஜெஸ்ஸி ஜோடியை எலிமினேட் செய்து விட்டதாக அறிவித்துள்ளனர். ஆனால் இது குறித்து அஜய் மற்றும் ஜெசி இருவரும் எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்