மகனை கையில் வாங்கிய அந்த தருணம்.! கண்கலங்கிய அஜய் கிருஷ்ணா.! வெளியான அழகிய வீடியோ.!

வெளியிட்டது

அஜய் கிருஷ்ணா தனது மகனை முதல் முறையாக கையில் வாங்கிய தருணத்தை அழகிய வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். மனைவி ஜெஸ்ஸி பிரசவ வலியில் துடித்த போது அவரை தாயக இருந்து பார்த்துக்கொண்டுள்ளார் அஜய். அந்த அழகிய வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. மேலும் தனது குட்டி மகனின் புகைப்படத்தை முகத்தை மறைத்தும் பகிர்ந்து இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் என்கிற பாட்டு நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் அஜய் கிருஷ்ணா. இவர் பிரபல பின்னணி பாடகர் உதித் நாராயணன் போலவே மிமிக்ரி செய்து பாடியதன் மூலமாக பலரின் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார். உதித் நாராயணன் பாட்டை கேட்கும் பொழுதெல்லாம் அஜய் கிருஷ்ணா நினைவுக்கு வருவதாகவும் பலரும் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் இவர் சில மாதங்களுக்கு முன்பு தன்னை காதலித்து வந்த ஜெஸ்ஸி என்பவரை திருமணம் செய்து கொண்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மகனை கையில் வாங்கிய அந்த தருணம்.! கண்கலங்கிய அஜய் கிருஷ்ணா.! வெளியான அழகிய வீடியோ.! 1

இவர்களின் திருமணம் இந்து முறைப்படி கோவிலிலும், கிறிஸ்தவ முறைப்படி சர்ச்சிலும் வைத்து நடந்தது. அஜய் கிருஷ்ணாவின் பிறந்தநாள் பரிசாக அவருடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை சமீபத்தில் அறிவித்திருந்தார். இவர்களின் காதல் திருமணத்திற்கு சாட்சியாக தற்போது ஆண் குழந்தை ஒன்றும் பிறந்திருக்கிறது. அந்த செய்தியை சமீபத்தில் ஜெசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். மேலும் மகனை பாட்டு பாடி தாலாட்டி தூங்க வைத்துக் கொண்டிருக்கிறார் அஜய் கிருஷ்ணா. அந்த வீடியோவை அவருக்கே தெரியாமல் எடுத்து ஜெசி தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். மீண்டும் இன்று ஒரு புதிய வீடியோவை பகிர்ந்து இருக்கிறார் ஜெஸ்ஸி. அதில் வீட்டில் பிரசவ வலியில் துடித்து கொண்டிருந்தது முதல் மருத்துவமனையில் குழந்தை பிறந்ததும் கையில் வாங்கும் வரை உள்ள அழகிய பதிவுகளை தொகுப்பாக வீடியோவாக பதிவிட்டு இருக்கிறார் ஜெஸ்ஸி.

எங்கள் குட்டி அஜய்க்கு முதல் மாத பிறந்தநாள் வாழ்த்துக்கள். 12.02.2023 ~12.03.2023… நேற்றுதான் நீ எங்கள் வாழ்வில் வந்தது போல் உணர்கிறேன். ஆனால் எங்களிடம் நீ கிடைத்து ஒரு மாதம் ஆகிவிட்டது. நீதான் எங்கள் வாழ்வின் சின்னஞ்சிறு மாயாஜாலமும் மகிழ்ச்சியும். எங்கள் குட்டி உலகம் நீதான்.! கடவுள் உனக்கு ஆரோக்கியம் தரட்டும் ப்ளீஸ் மிக வேகமாக வளர வேண்டாம் என்று அழகாக பதிவிட்டு இருக்கிறார். அந்த அழகான வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த அழகிய வீடியோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..! 

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்