தனது தந்தையின் உடலை கண்ணீர் மல்க சுமந்த வந்த அஜித்குமார்.! மனுஷன் உடைஞ்சு போய்ட்டாரே.!

வெளியிட்டது

நடிகர் அஜித் இறந்த தனது தந்தைக்கு இறுதி சடங்குகள் செய்து அவரது உடலை சுமந்து செல்லும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. நடிகை ஷாலினியும் தனது மாமனார் உடலுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார். நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று காலை காலமானார். பக்க வாதத்தால் உயிரிழந்த அஜித்தின் தந்தைக்கு அஜித்குமார் தற்போது இறுதி சடங்குகள் செய்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் திரைத்துறைக்கு வந்து சுமார் 30 ஆண்டுகளை கடந்து விட்டார். இத்தனை ஆண்டுகளில் 61 படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது 62வது படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் காலமாகி உள்ள செய்தி அஜித் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. 84 வயதாகும் அவர் சில நாட்களாக பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். தந்தை இறப்பு குறித்து அஜித்குமாரும் அவரது சகோதரர்கள் அனுப் குமார் மற்றும் அணில் குமார் உருக்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

தனது தந்தையின் உடலை கண்ணீர் மல்க சுமந்த வந்த அஜித்குமார்.! மனுஷன் உடைஞ்சு போய்ட்டாரே.! 1

அதில், எங்கள் தந்தை பி.எஸ். மணி, இன்று அதிகாலை உடல் நலமின்மை.காரணமாக தூக்கத்தில் காலமானார். அவருக்கு வயது 85.நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவரது பலவீனமான பக்கவாதத்தைத் தெரிந்து கொண்ட மருத்துவ வல்லுநர்கள், அவருக்கும் எங்கள் குடும்பத்துக்கும் வழங்கப்பட்ட அன்புக்கும் மற்றும் ஆதரவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். துக்கத்தின் இந்த நேரத்தில், அவர் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்தார் மற்றும் அழியாத அன்பை அறிந்தவர் என்று நாங்கள் ஆறுதல் அடைகிறோம். எங்கள் அம்மா, கிட்டத்தட்ட ஆறு தசாப்தங்களாக அவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.எங்களுக்கு வரும் அன்பான, ஆறுதலான செய்திகள் மற்றும் இரங்கல்களை நாங்கள் பாராட்டுகிறோம். எங்களால் அழைப்புகளை எடுக்கவோ அல்லது செய்திகளுக்கு பதிலளிக்கவோ இயலவில்லை.

 

அவரது இறுதி சடங்குகள் குடும்ப விஷயமாக மட்டுமே இருக்க வேண்டும் என விரும்பிகிறோம். இழப்பை அறிந்த அனைவரும் எங்கள் விருப்பத்தை மதிப்பார்கள் என்று நம்புகிறோம். தனிப்பட்ட முறையில் துக்கப்படுவதற்கும், முடிந்தவரை சமத்துவத்துடனும் கண்ணியத்துடனும் அவரது மறைவைச் சமாளிக்கவும். இப்படிக்கு அனுப்குமார், அஜித்குமார், அனில் குமார். இரங்கல் செய்திக்கு, psmanifamily@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். என்று கேட்டு கொண்டுள்ளனர். அந்த செய்தியை நீங்களும் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..! 

Youtube Video Embed Code Credits: Thanthi TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்