Categories: சினிமா

வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட அமீர் கானுக்கு நேரில் சென்று உதவிய அஜித்.! வைரல் புகைப்படங்கள்.!

வெளியிட்டது

சென்னையில் மழை வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட நடிகர் அமீர்கான் மற்றும் அவரது குடும்பத்தை நடிகர் அஜித் நேரில் சென்று சந்தித்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 47 வருடங்களில் முன்பு எப்போதும் பெய்யாத அளவிற்கு அதிக மழைப் பொழிவு சென்னையில் நிகழ்ந்துள்ளது. இதனால் சென்னை வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. பல இடங்களில் தண்ணீர் வடிந்த போதிலும் சில இடங்களில் தண்ணீர் தேங்கி நின்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த காலை நடிகர் விஷ்ணு விஷால் தாங்கள் காரப்பாக்கம் வீட்டில் மாட்டிக்கொண்டதாகவும், தண்ணீரின் அளவு நேரம் ஆக ஆக அதிகரித்து வருவதாகவும். உதவிக்காக பலரை அழைத்தும் யாரும் முன் வரவில்லை என்ற சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.

வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட அமீர் கானுக்கு நேரில் சென்று உதவிய அஜித்.! வைரல் புகைப்படங்கள்.! 1
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட தீயணைப்புத் துறையினர் 4 மணி நேரத்தில் விஷ்ணு விஷாலை மீட்டு இருந்தனர் படகு மூலமாக விஷ்ணு விஷால் குடும்பம் மற்றும் அவரது இல்லத்தில் தங்கி இருந்த அமீர்கான் குடும்பம் ஆகியவற்றை பத்திரமாக மீட்டெடுத்தனர். பாலிவுட்டின் மிகப்பெரிய நடிகராக இருக்கும் அமீர்கான் தனது தாயாரின் மருத்துவத்திற்காக சென்னையில் தங்கி இருக்கிறார். இந்த நிலையில் அமீர்கான் சென்னை வெள்ளத்தில் சிக்கிக்கொண்டதை தெரிந்து கொண்ட நடிகர் அஜித் நேரில் சென்று உதவி செய்திருக்கிறார். அமீர்கான் மற்றும் குடும்பத்தினர் பத்திரமாக தங்குவதற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் பத்திரமாக செல்வதற்கு போக்குவரத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார்.

இந்த தகவலை விஷ்ணு விஷால் புகைப்படத்துடன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். “பொதுவான நண்பர் மூலமாக இந்த தகவலை தெரிந்து கொண்ட அஜித் சார் நேரடியாக தங்கள் இடத்திற்கே வந்து போக்குவரத்திற்கும்,தங்குவதற்கும் ஏற்பாடுகளை செய்து கொடுத்தார்” என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவிற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது.

Twitter Original Source From: Vishnu Vishal

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்