தல அஜித் குமார் மற்றும் ஷாலினி ஆகிய இருவருக்கும் இன்று 23 வது திருமண நாள் கொண்டாடப்படுகிறது. அதற்காக ஷாலினி தங்களது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை instagram பதிவில் பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவிற்கு கீழே பலரும் தங்களது திருமண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தமிழ் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள்தான் அஜித் குமார் ஷாலினி தம்பதிகள். இவர்களுக்கு திருமணமாகி இன்றுடன் 23 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி ஷாலினி. பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். பின்னர் காதலுக்கு மரியாதை என்கிற படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் தல அஜித்துடன் இணைந்து அமர்க்களம் படத்தில் நடித்தார். பிறகு கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் போன்ற வெற்றி படங்களில் தொடர்ந்து நடித்தார்.

குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வந்தார் நடிகை ஷாலினி. பின்னர் அஜித்துடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. அஜித்துக்கும் ஷாலினியை மிகவும் பிடித்திருந்ததால் ஷாலினியிடம் தனது காதலை சொன்னார் அஜீத். ஷாலினியும் அதை ஏற்றுக் கொண்டதையடுத்து இருவருக்கும் 2000 ஆம் ஆண்டு பெற்றோரின் சம்பந்தத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர். தற்போது அனோஷ்காவும் ஆத்விக்கும் நன்றாக வளர்ந்து விட்டனர். அஜித், ஷாலினி, அனோஷ்கா, ஆத்விக் என யார் எங்கே சென்றாலும அவர்களின் புகைப்படங்கள் வைரலாவது வழக்கமாக இருக்கிறது. தற்போது சென்னையில் நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்காக ஷாலினி தனது மகன் மற்றும் மகளுடன் வந்திருந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி இருந்தது. இந்த நிலையில் இன்று 23வது திருமண நாளை கொண்டாடுகின்றனர் இந்த தம்பதிகள்.
இதற்காக தனது instagram பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார் ஷாலினி. அதில் அஜித்தின் கன்னத்தோடு கன்னம் வைத்து அவருக்கு இனிப்பு ஊட்டி திருமண நாள் வாழ்த்துக்கள் கூறிய புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்த அஜித் மற்றும் ஷாலினி ரசிகர்கள் அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். பல நட்சத்திர தம்பதிகள் கருத்துவேறுபாடல் விவாகரத்து ஆகி பிரிந்து வாழும் சூழ்நிலையில் எந்த சூழ்நிலை வந்தாலும் பிரியாமல் 23 ஆண்டுகளை கடந்து சிறந்த காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் தல அஜித் மட்டும் ஷாலினி தம்பதிகளுக்கு திரைப் பிரபலங்கள் தொடங்கி பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.!