“தலைக்கனம் இல்லாத தல”!! ஹவுஸ் கீப்பிங் பெண்ணிடமும் அஜித் வெளிப்படுத்திய பண்பு”!!

வெளியிட்டது

பண்பு மட்டுமே ஒரு மனிதனை மனிதனாக காட்டும். எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், என்ன சாதனை புரிந்தாலும், நல்ல குணமும், பண்பும் மட்டுமே அவர்களை பற்றிய நல்ல விதமான கருத்தை மக்களிடம் உருவாக்கும். அவ்வாறாக நடிகர் அஜித் வெளிப்படுத்திய பண்பு ஒன்று இப்பொது சமூகவலைத்தளங்களில் மிகவும் பாராட்டப்பட்டு வருகிறது.

"தலைக்கனம் இல்லாத தல"!! ஹவுஸ் கீப்பிங் பெண்ணிடமும் அஜித் வெளிப்படுத்திய பண்பு"!! 1

தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி, ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் அஜித். எந்த வித பின் புலமையும் இன்றி இப்பொது  சினிமாவின் ஆகா சிறந்த நாயகனாக தொடர்ந்து பல வசூல் சாதனைகளை செய்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கிய “வலிமை” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமின்றி 200 கோடிக்கு மேல் வசூல் செய்து அனைவரது பாராட்டுகளையும் அள்ளியுள்ளது.

இப்போது மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் இணையும் 3வது படம் “ஏ.கே. 61” படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாயகியாக நடிக்க மஞ்சு வாரியர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகர் அஜித் படத்தில் இருவேறு ரோல்களில் நடித்துள்ளார் என்றும் பேசப்பட்டு வருகிறது.

தன்னுடைய கனவான ஐரோப்பவில் பைக் ட்ரிப்பை முடித்து கொண்டு இப்பொது நடிகர் அஜித் சென்னை திரும்பியுள்ளார். அவர் ஏர்போர்ட்டில் இருந்து வரும் வீடியோ அதை தொடர்ந்து தற்போது துப்பாக்கி சூட்டில் களமிறங்யுள்ளார் அஜித். ஆம், தற்போது திருச்சியில் நடைபெறவிருக்கும் துப்பாக்கி சூடு போட்டியில் கலந்துகொள்ள திருச்சி சென்றுள்ளார். அஜித் எற்கனவே தமிழ்நாடு அளவில் நடைபெற்ற துப்பாக்கி சூடு நிகழ்ச்சியில் பங்கேற்று தங்க பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  அப்போது எடுக்கப்பட்ட விடியோக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்போதும் நிறையவே அஜித் திருச்சியில் கொண்ட போட்டியின் போது எடுக்கப்பட்ட விடியோக்கள் பல வெளிவந்தன வண்ணம் உள்ளன. இப்பொது வெளியாகியுள்ள வீடியோவில் நடிகர் அஜித் நடந்து செல்லும் போதும் அங்கிருந்த துப்புரவு தொழிலாளர்கள் இருவர் நின்று அவர் வந்ததும் வணக்கம் வைக்க, உடனே திரும்பிய அஜித் அவர்கள் அனைவர்க்கும் வணக்கம் வைத்து விட்டு செல்கிறார். இந்த வீடியோ இப்பொது சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்